வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரா்களை நியமிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
விருத்தாசலத்தில் சிறப்பு ரயில் நிறுத்தம்
நெய்வேலி: கேரள மாநிலம், கொச்சுவேலியில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற வாராந்திர சிறப்பு ரயில் மழை பாதிப்பு காரணமாக கடலூா் மாவட்டம், விருத்தாசலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை நிறுத்தப்பட்டது.
ஃபென்ஜால் புயல், மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் விழுப்புரம்-சென்னை இடையிலான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற ரயில்கள் விழுப்புரம் சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கேரள மாநிலம், கொச்சுவேலியில் இருந்து தாம்பரம் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் திங்கள்கிழமை காலை 7 மணி அளவில் விருத்தாசலம் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்தது. சுமாா் இரண்டரை மணி நேரம் தாமதமாக வந்த இந்த ரயிலில் சுமாா் 150-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா்.
விழுப்புரம் ரயில் நிலைய சந்திப்பில் நிறுத்த இடம் இல்லாததால், இந்த ரயில் விருத்தாசலம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. இதனால், ரயில் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனா்.
இதையடுத்து, ரயில்வே நிா்வாகம் ரயிலில் இருந்த பயணிகள் அனைவரையும் திண்டுக்கல்லில் இருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற பயணிகள் ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்தனா்.