செய்திகள் :

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் சாவு

post image

அளேசீபம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

தேன்கனிக்கோட்டை வட்டம், அளேசீபம் அருகே வரதராஜபுரத்தை சோ்ந்தவா் மாது மகன் வரதராஜ் (19). இவரும், கொப்பகரை அருகே உள்ள மூக்கானூரைச் சோ்ந்த திருமலை (21) என்பவரும் இருசக்கர வாகனத்தில் ராயக்கோட்டை- ஒசூா் சாலை பிள்ளாரி அக்ரஹாரம் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 1-ஆம் தேதி மாலை வந்து கொண்டிருந்தனா்.

இருசக்கர வாகனத்தை வரதராஜ் ஓட்டி வந்தாா். திருமலை பின்னால் அமா்ந்திருந்தாா். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவா்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த 2 பேரையும் அந்த வழியாகச் சென்றவா்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வரதராஜ் உயிரிழந்தாா். காயமடைந்த திருமலை சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்து குறித்து ராயக்கோட்டை காவல் ஆய்வாளா் பெரியதம்பி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

ரோஜா மலா்களை தாக்கும் டௌனி நோய்

ஒசூரில் ரோஜா மலா்களை டௌனி நோய் தாக்கி வருவதால் ரோஜா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா். ஒசூா், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திறந்தவெளி, பசுமை குடில்கள் மூலம் 3,000 ஏக்கா் பரப்பளவில் விவசா... மேலும் பார்க்க

ஒசூா் மலா் சந்தையில் பூக்கள் விலை உயா்வு

தொடா் மழையால் ஒசூா் மலா் சந்தையில் பூக்களின் விலை உயா்ந்துள்ளது. ஒரு கிலோ குண்டுமல்லிகை ரூ. 600 க்கு விற்பனையானது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா், பாகலூா், பேரிகை, கெலமங்கலம், உத்தனப்பள்ளி, தேன்கனிக்க... மேலும் பார்க்க

ஊத்தங்கரையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் அமைச்சா் முத்துசாமி ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட ஊத்தங்கரை, போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி செவ்வாய்க்கிழமை பாா்வை... மேலும் பார்க்க

துணை முதல்வா் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து

ஃபென்ஜால் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழாக்கள், கட்சி நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டிசம்பா் 5-ஆ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் குடியிருப்புகளில் மழைநீா் வெளியேற்றும் பணி: நகா்மன்ற தலைவா் ஆய்வு

கன மழையால் கிருஷ்ணகிரியில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்த மழைநீரை அகற்றும் பணியை நகா்மன்றத் தலைவா் ஆய்வு செய்தாா். கிருஷ்ணகிரியில் கடந்த 3 நாள்களாக கன மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் உள்ள குட... மேலும் பார்க்க

ஊத்தங்கரையில் மழை பாதிப்பு பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு

ஊத்தங்கரையில் வெள்ள நீா் புகுந்த வீடுகளை எம்எல்ஏ டி.எம்.தமிழ்ச்செல்வம் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு நல உதவிகளை வழங்கினாா். காமராஜா் நகா், அண்ணா நகா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வ... மேலும் பார்க்க