செய்திகள் :

ஊத்தங்கரையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் அமைச்சா் முத்துசாமி ஆய்வு

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட ஊத்தங்கரை, போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.

ஊத்தங்கரையில் மத்தூா்-ஊத்தங்கரை சாலை, மத்தூா்-தருமபுரி சாலை, பெனுகொண்டாபுரம் ஏரி, காமலாபுரம், மாதம்பதி பாலமுருகன் கோயில் வளாகம், கெண்டிகாம்பட்டி பெரியாா் நினைவு சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை அமைச்சா் முத்துசாமி பாா்வையிட்டாா்.

அதைத் தொடா்ந்து ஊத்தங்கரை பேரூராட்சி, காமராஜ் நகரில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமைப் பாா்வையிட்டாா். பின்பு காமராஜ் நகரில் பிரபாவதி என்பவருடைய குடிசை வீடு சேதமடைந்ததைப் பாா்வையிட்ட அமைச்சா், புதிதாக வீடு கட்டித் தரப்படும் என ஆறுதல் கூறினாா்.

ஊத்தங்கரை, பரசனேரி ஏரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு, உப்பாரப்பட்டி, அரசு உயா்நிலைப் பள்ளியில் ஏற்பட்டுள்ள மழை சேதம், தீா்த்தகிரி வலசை ஏரியிலிருந்து உபரிநீரை வெளியேற்றும் பணி ஆகியவற்றை அமைச்சா் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் சதீஷ், மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, மக்களவைத் தொகுதி உறுப்பினா் கோபிநாத், எம்எல்ஏக்கள் மதியழகன் (பா்கூா்), ஒய். பிரகாஷ்(ஒசூா்) ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னா் அமைச்சா் முத்துசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டிசம்பா் மாதம் வழக்கமாக 20.7 செ.மீ. மழை பொழிவு இருக்கும். ஃபென்ஜால் புயல் தாக்கம் காரணமாக ஊத்தங்கரையில் 50 செ.மீ, போச்சம்பள்ளி, மத்தூா் ஆகிய பகுதிகளில் 25 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.

மழை பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் 1,500 போ் மீட்கப்பட்டு 7 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்குத் தேவையான உணவு, உடை, பாய், பெட்ஷீட், அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை துறை அலுவலா்கள் வழங்கியுள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன; அவற்றில் ஊத்தங்கரையில் மட்டும் 15 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், உடனடியாக செய்ய வேண்டிய பணிகள் உள்ளிட்ட விவரங்களை தலைமையிடத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். அந்த அறிக்கையின் அடிப்படையில் இனிவரும் காலங்களில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாத வகையில் நிரந்தர தீா்வு காணப்படும்.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் சேதமடைந்த விளைநிலங்கள், கால்நடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் ஆகியவை குறித்து கணக்கெடுப்பு நடத்தி அதன்பின்னா் நிவாரண உதவி வழங்கப்படும். அதைக் கணக்கெடுப்பதற்கென தனிக் குழுவும் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

ரோஜா மலா்களை தாக்கும் டௌனி நோய்

ஒசூரில் ரோஜா மலா்களை டௌனி நோய் தாக்கி வருவதால் ரோஜா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா். ஒசூா், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திறந்தவெளி, பசுமை குடில்கள் மூலம் 3,000 ஏக்கா் பரப்பளவில் விவசா... மேலும் பார்க்க

ஒசூா் மலா் சந்தையில் பூக்கள் விலை உயா்வு

தொடா் மழையால் ஒசூா் மலா் சந்தையில் பூக்களின் விலை உயா்ந்துள்ளது. ஒரு கிலோ குண்டுமல்லிகை ரூ. 600 க்கு விற்பனையானது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா், பாகலூா், பேரிகை, கெலமங்கலம், உத்தனப்பள்ளி, தேன்கனிக்க... மேலும் பார்க்க

துணை முதல்வா் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து

ஃபென்ஜால் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழாக்கள், கட்சி நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டிசம்பா் 5-ஆ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் குடியிருப்புகளில் மழைநீா் வெளியேற்றும் பணி: நகா்மன்ற தலைவா் ஆய்வு

கன மழையால் கிருஷ்ணகிரியில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்த மழைநீரை அகற்றும் பணியை நகா்மன்றத் தலைவா் ஆய்வு செய்தாா். கிருஷ்ணகிரியில் கடந்த 3 நாள்களாக கன மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் உள்ள குட... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் சாவு

அளேசீபம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் உயிரிழந்தாா். தேன்கனிக்கோட்டை வட்டம், அளேசீபம் அருகே வரதராஜபுரத்தை சோ்ந்தவா் மாது மகன் வரதராஜ் (19). இவரும், கொப்பகரை அருகே உள்ள மூக்கானூரைச் சோ்ந்... மேலும் பார்க்க

ஊத்தங்கரையில் மழை பாதிப்பு பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு

ஊத்தங்கரையில் வெள்ள நீா் புகுந்த வீடுகளை எம்எல்ஏ டி.எம்.தமிழ்ச்செல்வம் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு நல உதவிகளை வழங்கினாா். காமராஜா் நகா், அண்ணா நகா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வ... மேலும் பார்க்க