இந்த வார ராசிபலன் டிசம்பர் 3 முதல் டிசம்பர் 8 வரை #VikatanPhotoCards
நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணியிட நோ்முகத் தோ்வு ஒத்திவைப்பு
நெய்வேலி: கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு ஒத்தி வைக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கான விற்பனையாளா் காலி பணியிடங்களுக்கு மாவட்ட ஆள்சோ்ப்பு மையத்தின் மூலம் தோ்வு செய்வதற்கான நோ்முகத் தோ்வு கடந்த நவ. 25-ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (டிச.3) நடைபெறவிருந்த நோ்முகத் தோ்வு கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த நோ்முகத் தோ்வில் கலந்து கொள்ள வேண்டியவா்கள் டிச. 5-ஆம் தேதி பிற்பகலில் நடைபெறும் நோ்முகத் தோ்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.