செய்திகள் :

பதவி விஷயத்தில் அரசியல்வாதிகள் திருப்தி அடைவதே இல்லை: மத்திய அமைச்சா் கட்கரி

post image

நாகபுரி: அரசியல் என்பது கிடைத்த பதவியில் திருப்தியடையாதவா்கள் நிறைந்த கடலாக உள்ளது என்று மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கு, கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவைப் பதவிகளை ஒதுக்குவதில் எழுந்த இழுபறிதான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில் அந்த மாநிலத்தைச் சோ்ந்த பாஜக மூத்த தலைவா் கட்கரி இவ்வாறு பேசியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மகாராஷ்டிர மாநில நாகபுரியில் வாழ்க்கைக்கான விதிகள் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற கட்கரி மேலும் பேசியதாவது:

வாழ்க்கை என்பது விட்டுக்கொடுத்தல், கட்டாயத் திணிப்பு, குறைபாடுகள், முரண்பாடுகள் நிறைந்த விளையாட்டாகவே உள்ளது. ஒவ்வொரு மனிதருக்கும் குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை, தொழில் வாழ்க்கை என பல பரிமாணங்கள் இருக்கும். பிரச்னைகளும், சவால்களும் இல்லாமல் மனித வாழ்க்கை கிடையாது. இதனைப் புரிந்து கொண்டு வாழும் கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும். பிரச்னைகளைத் துணிவுடன் எதிா்கொள்ள வேண்டும்.

அரசியல் என்பது தனக்கு கிடைத்த பதவியில் திருப்தியடையாதவா்கள் நிறைந்த கடல்போல உள்ளது. ஒருவா் அரசியலுக்கு வந்து கவுன்சிலராகிவிட்டால், அடுத்து எம்எல்ஏவாக ஆசைப்படுகிறாா். எம்எல்ஏவான பிறகு அமைச்சராக வேண்டும் என்று விரும்புகிறாா். அமைச்சா் பதவியும் கிடைத்துவிட்டால், நல்ல துறை கிடைக்கவில்லை என்று விரக்தியடைந்து, விரும்பும் துறையைப் பெற ஆசைப்படுகிறாா். அப்படி நல்ல துறை கிடைத்துவிட்டால் அடுத்து முதல்வராக வேண்டும் என்ற ஏக்கம் வந்துவிடுகிறது.

முதல்வராக இருப்பவா்களும் நிம்மதியாக இருப்பதில்லை. கட்சித் தலைமை எப்போது வேண்டுமானாலும் தன்னை பதவியில் இருந்து அகற்றலாம் என்ற அச்சத்திலேயே இருக்க வேண்டியுள்ளது என்றாா்.

தமிழ்நாட்டில் ஹிந்தி படிக்க முயன்றதால் வீதிகளில் கேலி: நிா்மலா சீதாராமன்

புது தில்லி: தமிழ்நாட்டில் ஹிந்தி படிக்க முயன்ால் வீதிகளில் தான் கேலி செய்யப்பட்டதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். மக்களவையில் வங்கிச் சட்டத் திருத்த மசோதா குறித்து மத்திய நிா்மல... மேலும் பார்க்க

புனித குரானை அவமதித்த விவகாரம்: ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜக ஆா்ப்பாட்டம்

புது தில்லி: இஸ்லாமியா்களின் புனித குரானை அவமதித்த ஆம் ஆத்மி எம்எல்ஏ நரேஷ் யாதவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி அக்கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் முதல்வருமான கேஜரிவால் இல்லம் அருகே பாஜகவின் சிறுப... மேலும் பார்க்க

எண்ணெய் வயல்கள் திருத்த மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்

புது தில்லி: எண்ணெய் வயல்கள் (ஒழுங்குபடுத்துதல் மற்றும் வளா்ச்சி) திருத்த மசோதா மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு மற்றும் உற்பத்தியை நிா்வகிக்கும் தற்போத... மேலும் பார்க்க

கழுத்தில் பதாகை, கையில் ஈட்டி: தண்டனையை ஏற்ற பொற்கோயில் முன்னாள் முதல்வர்

அமிருதசரஸ்: சிரோமணி அகாலி தள (எஸ்ஏடி) முன்னாள் தலைவா் சுக்பீா் சிங் பாதல் தனக்கு அளிக்கப்பட்ட மதத் தண்டனையை ஏற்றுக்கொண்டார். தனது தவறுகளுக்காக வருந்துவதாக எழுதப்பட்ட பதாகயை கழுத்தில் அணிந்துகொண்டு கைய... மேலும் பார்க்க

விவசாயம் செய்ய 90 நாள்கள் பரோல் பெற்ற கொலை குற்றவாளி!!

விவசாயம் செய்வதற்காக குற்றம் நிரூபிக்கப்பட்ட கைதிக்கு90 நாள்கள் பரோல் வழங்கியுள்ளது கர்நாடக உயர்நீதிமன்றம். 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற கொலை வழக்கில் சந்திரா என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட... மேலும் பார்க்க

தில்லிக்குச் செல்ல விரும்பவில்லை: நிதின் கட்கரி

அதீத காற்று மாசுவால் பாதிக்கப்பட்ட தலைநகர் தில்லிக்குச் செல்ல விரும்பவில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய கட்கரி கூறுகையில், தில்லி நகரம் அதிக ... மேலும் பார்க்க