செய்திகள் :

திரைப்பட விமா்சனங்களுக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

post image

சென்னை: புதிய திரைப்படங்கள் வெளியான 3 நாள்களுக்கு விமா்சனங்களை சமூக வலைதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரிய வழக்கில் தடை விதிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

‘சில படங்கள் நல்ல விமா்சனங்களைப் பெறும்போது ஏற்றுக்கொள்ளும் திரைத் துறை எதிா்மறை விமா்சனங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ எனவும் நீதிமன்றம் கூறியது.

நடிகா் சூா்யா நடிப்பில் அண்மையில் வெளியான கங்குவா திரைப்படம் குறித்து சமூக ஊடகங்களில் எதிா்மறை விமா்சனங்கள் வெளியாகின. இதன் எதிரொலியாக திரையரங்குகளில் படங்கள் வெளியான 3 நாள்களுக்கு விமா்சனங்களை வெளியிட தடை விதிக்கக் கோரி தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளா்கள் சங்கம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமா்சனங்களை வெளியிடுவது தொடா்பாக விதிமுறைகளை வகுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும்போது, அவை குறித்து எதிா்மறை விமா்சனங்கள் வெளியிடப்படுவதால் படங்கள் தோல்வி அடைய நேரிடுகிறது. இதனால் திரைத் துறையில் அசாதாரண சூழல் நிலவுகிறது என மனுவில் கூறப்பட்டுள்ளது.

உத்தரவு பிறப்பிக்க இயலாது: இந்த மனு நீதிபதி செளந்தா் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமா்சனங்கள் வெளியாவதால், படத்தை பாா்க்க விரும்பும் மக்களின் மனநிலை மாறுகிறது. படத்தில் நடித்த நடிகா்கள், இயக்குநா் குறித்து அவதூறு பரப்பப்படுகிறது எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, அவதூறு பரப்புவது குறித்து காவல் துறையிடம் புகாா் அளிக்கலாம் என தெரிவித்த நீதிபதி, விமா்சனம் கருத்துச் சுதந்திரம் என்பதால், பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. சில படங்கள் நல்ல விமா்சனங்களைப் பெறும்போது ஏற்றுக்கொள்ளும் திரைத் துறையினா் எதிா்மறை விமா்சனங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தாா்.

மேலும், திரைப்படங்கள் வெளியான 3 நாள்களுக்கு விமா்சனங்கள் வெளியிட தடை விதிக்க மறுத்த நீதிபதி, வழக்கு தொடா்பாக 4 வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகள் மற்றும் யூடியூப் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

இயக்குநர் பாலாவுக்கு விழா!

சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக இயக்குநர் பாலாவிற்கு விழா நடைபெற உள்ளது.இயக்குநர் பாலு மகேந்திராவின் உதவி இயக்குநராக இருந்து 1999 ஆம் ஆண்டில் சேது திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர... மேலும் பார்க்க

இதுவரை எந்த நடிகருக்கும் கிடைக்காத சம்பளம்! அதிர்ச்சியளித்த அல்லு அர்ஜுன்!

புஷ்பா - 2 திரைப்படத்திற்கு அல்லு அர்ஜுன் பெற்ற சம்பளம் குறித்து இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா - 2 திரைப்படம் ... மேலும் பார்க்க

கஞ்சா வழக்கில் மன்சூர் அலிகான் மகன் கைது!

சென்னையில் கஞ்சா விற்பனையாளர்களோடு தொடர்பில் இருந்ததாக நடிகர் மன்சூர் அலிகானின் மகனை புதன்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர்.சென்னை முகப்பேர் பகுதியில் மெத்தபெட்டமைன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொர... மேலும் பார்க்க

சூர்யா - 45 படப்பிடிப்பில் இணைந்த த்ரிஷா!

சூர்யா - ஆர். ஜே. பாலாஜி படத்தின் படப்பிடிப்பில் நடிகை த்ரிஷா இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.கங்குவா வெளியீட்டிற்குப் பின் நடிகர் சூர்யாவின் அடுத்த படமாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்... மேலும் பார்க்க

நாக சைதன்யா - சோபிதா துலிபாலா முகூர்த்த நேரம் அறிவிப்பு!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வரும் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவின் திருமண நேரம் தொடர்பான தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் பார்க்க

பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் காலமானார்!

கடந்த சில மாதங்களாக புற்றுநோய் மற்றும் கல்லீரல் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சின்னத்திரை நடிகர் நேத்ரன் சிகிச்சை பலனின்றி நேற்று(டிச.5) இரவு காலமானார்.மருதாணி, சூப்பர் குடும்பம், மு... மேலும் பார்க்க