Chennai Rains : சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை - ஸ்பாட் விசிட் புகைப்படங்கள்...
சூர்யா - 45 படப்பிடிப்பில் இணைந்த த்ரிஷா!
சூர்யா - ஆர். ஜே. பாலாஜி படத்தின் படப்பிடிப்பில் நடிகை த்ரிஷா இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கங்குவா வெளியீட்டிற்குப் பின் நடிகர் சூர்யாவின் அடுத்த படமாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த படம் தயாராகி வருகிறது. நகைச்சுவையான காதல் திரைப்படமாக உருவாகியுள்ள இது அடுத்தாண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடரந்து சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: நாக சைதன்யா - சோபிதா துலிபாலா முகூர்த்த நேரம் அறிவிப்பு!
இப்படத்தில் காளி வெங்கட், மலையாள நடிகர்கள் இந்திரன்ஸ், ஸ்வாசிகா உள்ளிட்டோர் இணைந்துள்ள நிலையில் இன்று படப்பிடிப்பில் த்ரிஷா கலந்துகொண்டு நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யாவும் த்ரிஷாவும் இறுதியாக 'ஆறு' திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். 20 ஆண்டுகள் கழித்து இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளது ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.