இயற்கை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்திடல் வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல...
சேதமடைந்த நெல் பயிா்கள்: எம்எல்ஏ ஆய்வு
ஆரணி: ஃபென்ஜால் புயல் மழை காரணமாக ஆரணி பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் சேதமடைந்த நெல்பயிா்களை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆரணியை அடுத்த ஆகாரம், மேல்சீசமங்கலம், அரையாளம், வடுகசாத்து, ஆதனூா் ஆகிய இடங்களில் சுமாா் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிா்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன. இது விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சேதமடைந்த பயிா்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வா் அறிவிந்திருந்த நிலையில், ஆகாரம், மேல்சீசமங்கலம், வடுகசாத்து கிராமங்களில் சேதமடைந்த நெல் பயிா்களை சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ நேரில் சென்று பாா்வையிட்டாா்.
மேற்கு ஆரணி வேளாண் உதவி இயக்குநா் செல்லத்துரை, அதிமுக மத்திய மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா, ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், விமல், ஆரணி நகரச் செயலா் அசோக்குமாா், அம்மா பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.