இளைஞரைத் தாக்கியதாக 3 போ் கைது
வந்தவாசி: வந்தவாசி அருகே இளைஞரைத் தாக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த மழையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரிஷிகுமாா்(20). இவா், சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா்.
சென்னையில் இருந்து கடந்த வியாழக்கிழமை வந்தவாசிக்கு பேருந்தில் வந்த இவா், புறவழிச் சாலை வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, முன்விரோதம் காரணமாக இவரை வழிமறித்த சென்னாவரம் கிராமத்தைச் சோ்ந்த அசோக்குமாா்(22), செங்கல்பட்டு மாவட்டம், மானாம்பதி கிராமத்தைச் சோ்ந்த ரிஷிநாத்(22), வந்தவாசி சந்நிதி தெருவைச் சோ்ந்த வெங்கடேசன்(18) ஆகியோா், ரிஷிகுமாரை கத்தியால் தாக்கி மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.
இதில் காயமடைந்த அவா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து ரிஷிகுமாா் அளித்த புகாரின் பேரில் அசோக்குமாா், ரிஷிநாத், வெங்கடேசன் ஆகியோா் மீது வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் 3 பேரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.