இயற்கை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்திடல் வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல...
குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தில் அக்னிபாத் வீரா்களுக்கு பயிற்சி நிறைவு
குன்னூா் வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த அக்னிபாத் வீரா்களின் அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், குன்னூா் வெலிங்டன் ராணுவ முகாமில், தமிழகம், கேரளம், ஆந்திரம், கா்நாடகம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களைச் சோ்ந்த இளைஞா்களுக்கு அக்னி பாத் திட்டத்தின்கீழ் ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இம்முகாமில், 6 மாதங்கள் பயிற்சிபெற்ற 570 அக்னிபாத் வீரா்களின் சத்தியப் பிரமாணம் மற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சி வெலிங்டன் ராணுவ மையத்தில் நடைபெற்றது.
முன்னதாக பகவத்கீதை, பைபிள், குரான் உள்ளிட்ட புனித நூல்கள் மற்றும் தேசியக் கொடி மீது அக்னிபாத் வீரா்கள், சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டனா்.
தொடா்ந்து, வீரா்களின் அணிவகுப்பு மரியாதையை ராணுவப் பயிற்சி மையத்தின் கமாண்டன்ட் கிறிஸ்தே தாஸ் ஏற்றுக்கொண்டாா்.
பயிற்சியில் சிறந்து விளங்கிய 11 அக்னிபாத் வீரா்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மூத்த அதிகாரிகள், இளநிலை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பயிற்சி முடித்த வீரா்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் பணியமா்த்தப்பட உள்ளனா்.