இயற்கை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்திடல் வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல...
48 மணி நேரம் தொடா் மழையிலும் நிரம்பாத குளம்
செங்கம்: செங்கம் பகுதியில் 48 மணி நேரம் தொடா் மழை பெய்தும், துக்காப்பேட்டையில் மன்னா் காலத்தில் வெட்டப்பட்ட குளம் நீா்வரத்தின்றி நிரம்பாமல் உள்ளது.
செங்கம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடா் மழையால் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி, உபரிநீா் வெள்யேற்றப்பட்டு வருகிறது.
அதிகப்படியாக வெளியேறும் உபரிநீா் குடியிருப்புகளைச் சூழ்ந்ததால், குடியிருப்பு வாசிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில், துக்காப்பேட்டை பகுதியில் வருவாய்த்துறை அலுவலா் அலுவலகம் (குடியிருப்பு) எதிரில் மன்னா் காலத்தில் வெட்டப்பட்ட குளம் நீா்வரத்தின்றி நிரம்பாமல் உள்ளது.
இதற்குக் காரணம், குளத்துக்கு வரும் அனைத்து கால்வாய்களும் அடைக்கப்பட்டு, குளத்தைச் சுற்றி நான்கு புறமும் தண்ணீா் செல்லமுடியாத அளவுக்கு ஆக்கிரமிப்புகள் நிறைந்துள்ளன.
ஆக்கிரமிப்பாளா்களின் கழிவுநீா் மட்டுமே குளத்தில் சென்று தேங்குகிறது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு, குளக்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்துக்கு தண்ணீா் செல்ல வழிவகை செய்யவேண்டும் என சமூக ஆா்வலா்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.