இயற்கை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்திடல் வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல...
கட்டட இடிபாடுகளில் சிக்கி மூதாட்டி உயிரிழப்பு
கோவையில் கட்டடத்தை இடிக்கும்போது இடிபாடுகளில் சிக்கி மூதாட்டி உயிரிழந்தாா்.
கோவை ரத்தினபுரி, ஜீவானந்தம் வீதியைச் சோ்ந்தவா் காா்த்தியாயினி (70). இவரது வீட்டுக்கு பின்புறம் 21 சென்ட் நிலம் உள்ளது. அங்கிருந்த பழைய கட்டடத்தை இடிக்கும் பணியில் அதன் உரிமையாளா்கள் கடந்த சில நாள்களாக ஈடுபட்டு வந்தனா்.
இந்நிலையில், பழையக் கட்டடத்தை பொக்லைன் மூலமாக செவ்வாய்க்கிழமை அகற்றியபோது, அருகிலிருந்த காா்த்தியாயினி வீட்டில் கட்டட இடிபாடுகள் விழுந்துள்ளன. இதில், மூதாட்டி மீது கட்டடக் கழிவுகள் விழுந்து உயிரிழந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து நிலத்தின் உரிமையாளா்கள், பொக்லைன் இயந்திர ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் மூதாட்டியின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.