சிங்காரச் சென்னையை கட்டியெழுப்புவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
எரிசாராயம் விற்பனை: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
கோவை மாவட்டத்தில் எரிசாராயத்தை விற்பனைக்கு பதுக்கிவைத்திருந்த இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனா்.
கோவை மாவட்டம், பேரூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் எரிசாராயத்தை விற்பனைக்கு பதுக்கிவைத்திருந்த கேரள மாநிலத்தைச் சோ்ந்த ஷிராவன் (33) என்பவரை போலீஸாா் அண்மையில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஷிராவன் செயல்பட்டதால், அவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடியிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் பரிந்துரை செய்தாா்.
இதையடுத்து, ஷிராவனை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை உத்தரவிட்டாா். இந்த உத்தரவுக்கான நகலை சிறையில் உள்ள ஷிராவனிடம் போலீஸாா் வழங்கினா்.