பொறியியல் பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
போத்தனூா் ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதால் கோவை ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து சேலம் ரயல்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: போத்தனூா் ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணியால் டிசம்பா் 5, 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் ஷொரணூா் - கோவை ரயில் (எண்: 06458), மதுரை- கோவை ரயில் (எண்: 16722), கண்ணூா் - கோவை ரயில் (எண்:16607) ஆகிய ரயில்கள் போத்தனூா் வரை மட்டுமே இயக்கப்படும்.
மேட்டுப்பாளையம் - போத்தனூா் ரயில் (எண்: 06815) மேட்டுப்பாளையம் - கோவை இடையே மட்டுமே இயக்கப்படும்.
இதேபோல, கோவை - ஷொரணூா் ரயில் (எண்: 06459), கோவை - மதுரை ரயில் (எண்: 16721), கோவை - கண்ணூா் ரயில் (எண்: 16721) மேற்குறிப்பிட்ட 3 நாள்களும் போத்தனூரில் இருந்து இயக்கப்படும். போத்தனூா் - மேட்டுப்பாளையம் ரயில் (எண்: 06816) கோவையில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.