தில்லிக்குச் செல்ல விரும்பவில்லை: நிதின் கட்கரி
அதீத காற்று மாசுவால் பாதிக்கப்பட்ட தலைநகர் தில்லிக்குச் செல்ல விரும்பவில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய கட்கரி கூறுகையில்,
தில்லி நகரம் அதிக காற்று மாசுவால் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மாசு காரணமாக எனக்கு தொற்று ஏற்படுகிறது. இதனால் இங்கு வாழவும், செல்லவும் எனக்குப் பிடிக்கவில்லை..
ஒவ்வொரு முறையும், தில்லிக்கு வரும்போது மாசு அளவு அதிகமாக இருப்பதால் போகலாமா, வேண்டாமா என்று யோசிக்கின்றேன். எரிபொருள்களின் பயன்பாட்டைக் குறைப்பதே மாசுபாட்டைக் குறைக்க சிறந்த வழி.
தலைநகரில் காற்றின் தரம் இன்று மேம்பட்ட நிலையில் 274 ஆக பதிவானது. தொடர்ந்து மூன்றாவது நாளாகக் காற்று மாசு குறைந்துள்ளது. நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, டிசம்பரில் தில்லி மக்கள் சுவாசிப்பது எளிதாகியுள்ளது.
இந்தியா ரூ.22 லட்சம் கோடி மதிப்பிலான புதை படிவ எரிபொருள்களை இறக்குமதி செய்கிறது, இது பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் பார்வையிலிருந்து சவாலானது.
இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னை வறுமை, பசி மற்றும் வேலையின்மை, எனவே வரும் காலங்களில், பொருளாதாரம் மற்றும் சமூக சமத்துவத்தை அடைவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.