செய்திகள் :

``ஸ்டாலின் பதில் சொல்ல மறுக்கும்போதே, அதானி சந்திப்பு உறுதியாகிறது..!” - NTK கார்த்திகைச்செல்வன்

post image

``அதானி விவகாரத்தில் தி.மு.க-வை டார்கெட் செய்யும் நாம் தமிழர், பா.ஜ.க-வை கண்டுகொள்வதில்லையே.. அதானியை எதிர்த்து ஆர்பாட்டம் நடத்த உங்களுக்கும் தயக்கமா?”

``அதானி மூலமாக ஒரு திட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்துகிறதென்றால் முதலில் களத்துக்கு வருவது அண்ணன் சீமானும் நாம் தமிழர் கட்சியும்தான். காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு எதிரான போராடவில்லையா.. பரந்தூரில் போராடவில்லையா? ஆனால் அதானி தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்தார் என்பதுதான் குற்றச்சாட்டு. எனவே இங்கே நடத்தப்பட வேண்டியது விசாரணை என்பதால் அழுத்தமாக குரல் எழுப்புகிறோம். அதேவேளையில் அதானி - முதல்வர் சந்திப்பு நடந்ததா இல்லையா என்ற கேள்விக்கு தி.மு.க பதில்சொல்ல வேண்டும் என நிர்பந்திக்கிறோம். குறிப்பாக எங்கள் அறிக்கையை படித்த யாரும் அதானி விவாகரத்தில் பா.ஜ.க-வை நாங்கள் கண்டுகொள்வதில்லை என்ற விமர்சனத்தை முன்வைக்கமாட்டார்கள்”

கெளதம் அதானி

``அதானி சந்திப்பு குறித்த கேள்வியை தமிழ்நாடு முதலமைச்சர் தவிர்த்துவிட்டாரே!”

``அதானி -ஸ்டாலின் சந்திப்பு குறித்தான கேள்வியை எதிர்கொள்வதில் என்ன பிரச்னை? `அதானி என் வீட்டுக்கு வரவில்லை என ஸ்டாலின் சொல்வாரா?` அப்படிச் சொல்ல மறுக்கும்போதே அதானியுடன் சந்திப்பு நடந்தது உறுதியாகிறது. பாமக நிறுவனர் ராமதாஸும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியும் எழுப்பும் கேள்விகளை ஆணவத்துடன் ஸ்டாலின் பதிலளிப்பதெல்லாம் கண்டனத்துக்குரியது. `இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்` என்ற குரல் ஸ்டாலினுக்கு கச்சிதமாக பொருந்தும். எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும் வேலைவெட்டியில்லாமல்தான் வெள்ளை அறிக்கை கேட்டுக் கொண்டிருந்தாரா ஸ்டாலின். வெட்கமின்றி எதிர்க்கட்சி என்றால் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் எனப் பேசி கீழ்தரமான அரசியல் செய்ததும் இதே தி.மு.கதானே?”

ஸ்டாலின்

``பேரிடர் விவகாரங்களை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்பதுதானே தி.மு.க குற்றச்சாட்டு!”

`அரசின் செயல்பாடுகளின்மீது ஆக்கப்பூர்வமாக எந்த விமர்சனத்தை முன்வைத்தாலும் திமிர்த்தனமாக பதிலளித்துதான் வட மாவட்ட மக்களை தத்தளிக்கவிட்டிருக்கிறார்கள். செம்பரம்பாக்கம் ஏரியை நள்ளிரவில் திறந்துவிட்டதுபோல் இன்றைக்கு சாத்தணூர் அணையை நள்ளிரவில் திறந்தது அப்பட்டமான நிர்வாக தோல்வி. ஸ்டாலின் அரசின் கையாளாகத்தனம்தான். நிலச்சரிவை எப்படி தடுக்க முடியும் என வாய்ச்சவடால் பேசுகிறார்கள். மலையடிவார குடியேற்றங்களும், கனிமவள கொள்ளைகளையும் அதிகாரத் துணையுடன் அரங்கேற்றியது இவர்களதானே!

உதயகுமார், எடப்பாடி பழனிசாமி

``நா.த.க பார்வையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி சிறப்பாக செயல்படுகிறார் போலயே!”

``நாம் தமிழர் கட்சிதான் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியாக செயல்படுகிறது. அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக அ.தி.மு.க செயலிழந்ததுதான் தமிழ்நாட்டின் கேடு என்பேன். அ.தி.மு.க-விடமுள்ள 64 எம்.எல்.ஏ-க்கள் எங்களிடமிருந்திருந்தால் தி.மு.க-வின் மக்கள் விரோத போக்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போமா? சீமான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருந்தால் ஸ்டாலினும் உதயநிதியும் சட்டமன்றத்துக்கு முதலில் வருவார்களா?”

``பெரியாரை பெண்ணுரிமை போராளி எனச் சொல்லி வந்த நாம் தமிழர் கட்சி, திடீரென அதனை மறுத்ததோடு ஈ.வே.ரா என அழைப்பது ஏன்? இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்?”

பெரியார்

``பெண்ணுரிமை பேசுவதற்கு பெரியாரிடம் நல்ல கருத்துகள் இருந்ததில்லை என்பதே என் கருத்து. இத்தனை காலமாக பெரியாரை பற்றி பலர் எழுதிய பொய் தகவல்களை படித்த நாங்கள் இப்போதுதான் பெரியார் என்ன எழுதியிருக்கிறார் என்பதை தெரிந்துகொண்டோம். `பட்டியல் சமூக பெண்கள் மேல்சட்டை அணிந்தால் துணிவிலை ஏறத்தான் செய்யும்’ என அபத்தமாக பேசியவர் பெண்ணுரிமை போராளியா? அதேசமயம் சமூக நீதி, சாதி ஒழிப்பு விவகாரத்திலும் அவரது பங்களிப்பு கட்டாயம் இருக்கிறது.

அதில் சில மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் பெரியார்மீது மரியாதை உண்டு, அவர் எங்கள் வழிக்காட்டிதான். அதற்கென அவர்தான் எல்லாம் என்ற கருத்தை கடுமையாக எதிர்க்கிறோம். விவாத நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகி ஒருவர் பெரியாரை ஈ.வே.ரா எனக் குறிப்பட்டார். பெயரை உச்சரிப்பதை வைத்து அவரை அவமதித்துவிட்டோம் என்பதை ஏற்க முடியாது”

காளியம்மாள்

``பிரபாகரனை சீமான் 10 நிமிடம்தான் சந்தித்தார் என காளியம்மாள் சொல்கிறார். அதுதான் உண்மையா?”

``உள்நோக்கம் கொண்டு விமர்சிப்பவர்கள் சொல்வதுபோலவே, 10 நிமிடம் மட்டுமே அண்ணன் சீமான் தலைவரை சந்தித்ததாக வைத்துக்கொண்டால் கூட, தமிழ்தேசிய அரசியலையும் இன விடுதலை போராட்டத்தையும் அவர்தானே முன்னெடுத்திருக்கிறார் என மேடையில் சொல்ல வந்ததை, `10 நிமிடம்தான் சந்தித்தார்’ என சொல்லிவிட்டதாக தனிப்பட்ட முறையில் விளக்கமளித்துள்ளார் காளியம்மாள்.”

``தினம்தோறும் நாம் தமிழர் கட்சியிலிருந்து மாவட்ட நிர்வாகிகள் விலகிக் கொண்டே இருக்கிறார்களே!”

சீமான் | Seeman

``கட்சியிலிருந்து வெளியேறுவோரெல்லாம் மாவட்ட, மண்டல செயலாளர்கள் என்பது திட்டமிட்ட கருத்துருவாக்கம். வெளியேறுவோரால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை. நவம்பர் 27-ம் தேதி நடந்த மாவீரர் நாளுக்கு மதுராந்தகத்தில் கூடிய கூட்டத்தை பார்த்தால் `கூடாரம் காலியாகிவிட்டது’ எனச் சொல்வது அரசியல் வன்மம் என்பது தெரியவரும்”

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MadrasNallaMadras

Cibil: `எமதர்மனுக்கு சித்ரகுப்தர் போல நமக்கு சிபில்'- சிபில் ஸ்கோரை சாடிய கார்த்திக் சிதம்பரம்

தற்போது நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று வங்கி சட்டத் திருத்த மசோதாவின் போது, சிபில் ஸ்கோர் குறித்து பேசிய மாநிலங்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரத்தின் பேச்சு கவனத்தை... மேலும் பார்க்க

போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணி; 78 பேர் அதிரடி பணி நீக்கம் - நெல்லை மண்டலத்தில் பரபரப்பு!

நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பேரூராட்சி, நகராட்சிகளில் மாற்றுத்திறனாளிக்களுக்கான பணியிடத்தில் போலி சான்றிதழ் வழங்கி அரசு பணியில் சேர்ந்த 78 பேர் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்ட... மேலும் பார்க்க

ஒரே வெள்ளத்தில் நொறுங்கிய புதிய பாலம்; திராவிட மாடல் மீது எடப்பாடி விமர்சனம் - கள நிலவரம் என்ன?

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்குஉட்பட்ட அகரம்பள்ளிப்பட்டு - தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை,... மேலும் பார்க்க

`மனசாட்சியை அடகுவைத்த மேதாவிகள்; பொய் விலை போகாது’ - ராமதாஸ், எடப்பாடியை தாக்கி பேசிய துரைமுருகன்!

திருவண்ணாமலை மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கேயுள்ள சாத்தனூர் அணையில் 119 அடிக்கு நீரை தேக்கி வைக்க முடியும்.சாத்தனூர் அணை திறப்பு: ராமதாஸ் அறிக்கை...தொடர் கனமழைக் காரணமாக, சாத்தனூர் அணை நிரம்... மேலும் பார்க்க

திருச்சி: வாய்க்காலில் பாலம் இல்லாமல் அவதிப்படும் விவசாயிகள்… கேள்விக்குறியாகும் விவசாயம்!

திருச்சி, திருப்பராய்த்துறை ஊராட்சியில் எலமனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் உள்ளன. அப்பகுதி விவசாயிகள் தங்கள் வயலை சென்றடைய 40 அடி தூரம் கொண்ட ஒரு கொடிங்கால் வாய்க்காலைக் ... மேலும் பார்க்க

Nirmala Sitharaman: நிர்மலா சீதாராமன் மீது போடப்பட்ட மிரட்டல் வழக்கு 'தள்ளுபடி'

'ரெய்டு' என்றுக்கூறி தொழிலதிபர்களை தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி கொடுக்க மிரட்டியதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜெ.பி. நட்டா, கர்நாடக மாநில முன்னாள் பாஜக தலைவர் கட்டீல் உள்ளிட்ட பாஜக தலைவ... மேலும் பார்க்க