Nirmala Sitharaman: நிர்மலா சீதாராமன் மீது போடப்பட்ட மிரட்டல் வழக்கு 'தள்ளுபடி'
'ரெய்டு' என்றுக்கூறி தொழிலதிபர்களை தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி கொடுக்க மிரட்டியதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜெ.பி. நட்டா, கர்நாடக மாநில முன்னாள் பாஜக தலைவர் கட்டீல் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மீதும், சில அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதும் கர்நாடகாவை சேர்ந்த ஆதர்ஷ் ஐயர் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கர்நாடகா சிறப்பு நீதிமன்றம், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது எப்.ஐ.ஆர் பதிய உத்தரவிட்டது. இதையொட்டி, கடந்த செப்டம்பர் மாதம் எப்.ஐ.ஆரும் போடப்பட்டது.
மீண்டும் கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தப்போது, "மிரட்டப்பட்டவர்கள் என்று கூறப்படுகிற யாரும் நீதிமன்றத்திற்கு வரவில்லை" என்று பாஜக தலைவர்கள் சார்பாக ஆஜரான வக்கீல் வாதிட்டார்.
இந்த நிலையில், தற்போது இந்த வழக்கு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, பாஜக தலைவர்கள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது போடப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளார்.