செய்திகள் :

Fengal: 'குடும்ப அட்டைக்கு ரூ. 2,000 நிவாரணம்' - 6 மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் அறிவிப்பு

post image

ஃபெஞ்சல் புயலால் பெய்த அதி கனமழையில் தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்திருக்கின்றன. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. மக்கள் உயிரிழப்புகள், கால்நடை உயிரிழப்புகள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகள் எனப் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கிறது.

ஊத்தங்கரை

இதன் காரணமாக, ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் இன்று (டிசம்பர் 3) நடைபெற்றது. இந்த நிலையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு வெளியிட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில்,

* புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீட்டுத் தொகை.

* சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ. 10,000 இழப்பீட்டுத் தொகை.

* முழுமையாகச் சேதமடைந்த குடிசைகளுக்குக் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை.

திருவண்ணாமலை நிலச்சரிவு

* மழையினால் பாதிக்கப்பட்ட (33 சதவிகிதம் மற்றும் அதற்கு மேல்) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 17,000 இழப்பீட்டுத் தொகை.

* பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதமுற்றிருப்பின் (33 சதவிகிதம் மற்றும் அதற்கு மேல்) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 22,500.

* மழையினால் பாதிக்கப்பட்ட (33 சதவிகிதம் மற்றும் அதற்கு மேல்) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500.

* எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்புகளுக்கு ரூ.37,500 நிவாரணத் தொகை.

* வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்புகளுக்கு ரூ.4,000-மும், கோழி உயிரிழப்புகளுக்கு ரூ.100-ம் நிவாரணத் தொகை.

* அதி கனமழையின் காரணமாகக் கடுமையான மழைப்பொழிவினைச் சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாள்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூ. 2,000 நிவாரணத் தொகை.

ஸ்டாலின்

* மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு, புதிய சான்றிதழ்கள் வழங்கச் சிறப்பு முகாம்கள்.

* மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிப்புக்குள்ளான குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்குப் புதிய பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்." எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/Neerathikaaram

``ஸ்டாலின் பதில் சொல்ல மறுக்கும்போதே, அதானி சந்திப்பு உறுதியாகிறது..!” - NTK கார்த்திகைச்செல்வன்

``அதானி விவகாரத்தில் தி.மு.க-வை டார்கெட் செய்யும் நாம் தமிழர், பா.ஜ.க-வை கண்டுகொள்வதில்லையே.. அதானியை எதிர்த்து ஆர்பாட்டம் நடத்த உங்களுக்கும் தயக்கமா?” ``அதானி மூலமாக ஒரு திட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்... மேலும் பார்க்க

போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணி; 78 பேர் அதிரடி பணி நீக்கம் - நெல்லை மண்டலத்தில் பரபரப்பு!

நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பேரூராட்சி, நகராட்சிகளில் மாற்றுத்திறனாளிக்களுக்கான பணியிடத்தில் போலி சான்றிதழ் வழங்கி அரசு பணியில் சேர்ந்த 78 பேர் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்ட... மேலும் பார்க்க

ஒரே வெள்ளத்தில் நொறுங்கிய புதிய பாலம்; திராவிட மாடல் மீது எடப்பாடி விமர்சனம் - கள நிலவரம் என்ன?

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்குஉட்பட்ட அகரம்பள்ளிப்பட்டு - தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை,... மேலும் பார்க்க

`மனசாட்சியை அடகுவைத்த மேதாவிகள்; பொய் விலை போகாது’ - ராமதாஸ், எடப்பாடியை தாக்கி பேசிய துரைமுருகன்!

திருவண்ணாமலை மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கேயுள்ள சாத்தனூர் அணையில் 119 அடிக்கு நீரை தேக்கி வைக்க முடியும்.சாத்தனூர் அணை திறப்பு: ராமதாஸ் அறிக்கை...தொடர் கனமழைக் காரணமாக, சாத்தனூர் அணை நிரம்... மேலும் பார்க்க

திருச்சி: வாய்க்காலில் பாலம் இல்லாமல் அவதிப்படும் விவசாயிகள்… கேள்விக்குறியாகும் விவசாயம்!

திருச்சி, திருப்பராய்த்துறை ஊராட்சியில் எலமனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் உள்ளன. அப்பகுதி விவசாயிகள் தங்கள் வயலை சென்றடைய 40 அடி தூரம் கொண்ட ஒரு கொடிங்கால் வாய்க்காலைக் ... மேலும் பார்க்க

Nirmala Sitharaman: நிர்மலா சீதாராமன் மீது போடப்பட்ட மிரட்டல் வழக்கு 'தள்ளுபடி'

'ரெய்டு' என்றுக்கூறி தொழிலதிபர்களை தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி கொடுக்க மிரட்டியதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜெ.பி. நட்டா, கர்நாடக மாநில முன்னாள் பாஜக தலைவர் கட்டீல் உள்ளிட்ட பாஜக தலைவ... மேலும் பார்க்க