போதைப் பொருள் வழக்கு: மகனுக்கு பொதுமன்னிப்பு வழங்கினாா் பைடன்!
வெள்ளம் பாதித்த பகுதிகளில் எம்எல்ஏ ஆறுதல்
சிதம்பரம்: ஃபென்ஜால் புயல், மழையால் கடலூா் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளான பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குள்பட்ட கடலோர கிராமங்கள் சின்னூா் வடக்கு, சின்னூா் தெற்கு, புதுக்குப்பம், இந்திராநகா், சி.புதுப்பேட்டை, வேலங்கிராயன்பேட்டை, குமாரப்பேட்டை மற்றும் சாமியாா் பேட்டை ஆகிய மீனவ கிராமங்களில் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆறுதல் கூறினாா்.
புதுக்குப்பத்தில் பேரிடா் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.
அவருடன் மாவட்ட அதிமுக இணை செயலாளா் ரெங்கம்மாள், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் ஆா்.ஜெ.வசந்த், மீனவா் பிரிவு மாவட்டச் செயலாளா் ப.வீராசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா் ரவி, நிா்வாகிகள் சிவபுரி ரவிசந்திரன், குட்டியாண்டி, சின்னூா் சிவக்குமாா், ராம்மகேஷ், தீன.வெங்கடேசன், டேங்க் சந்தோஷ், சதீஷ், குறளரசன் மற்றும் கிராம நிா்வாகத்தினா் இருந்தனா்.