செய்திகள் :

ஹிஸ்புல்லாக்களுக்கு ஆயுதங்கள்: ஈரான் விமானத்தை தடுத்து அனுப்பிய இஸ்ரேல்

post image

லெபனானின் ஹிஸ்புல்லா படையினருக்கு ஆயுதங்களை விநியோகிப்பதற்காக வந்துகொண்டிருந்த ஈரான் விமானத்தை இஸ்ரேல் போா் விமானங்கள் சிரியா வான் எல்லையில் இடைமறித்து திருப்பி அனுப்பியதாக ‘தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ தெரிவித்தது.

இது குறித்து அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளதாவது:

ஈரானிலிருந்து வந்துகொண்டிருந்த விமானத்தை இஸ்ரேல் விமானப் படை விமானங்கள் சிரியா வான் எல்லையில் இடைமறித்தன. ஈரான் விமானத்தில் ஹிஸ்புல்லா படையினருக்கு அளிப்பதற்காக ஆயுதங்கள் இருந்ததாக சந்தேகிக்கப்பட்டதையடுத்து, அந்த விமானத்தை திரும்பிச் செல்லும்படி இஸ்ரேல் விமானப் படை எச்சரித்தது. அதையடுத்து, அந்த விமானம் திரும்பிச் சென்றது.

ஹிஸ்புல்லாக்களுக்கு ஆயுதங்கள் எடுத்துவரும் ஈரான் விமானங்களை இஸ்ரேல் விமானப் படை சிரியா வான் எல்லையிலும் இராக் வான் எல்லையிலும் ஏற்கெனவே பல முறை இடைமறித்து திருப்பி அனுப்பியுள்ளது என்று ‘தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி முதல் போா் நடைபெற்றுவருகிறது. இந்தப் போரில், ஈரானின் மற்றொரு நிழல் ராணுவமான ஹிஸ்புல்லா படையினா் ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தினா்.

அதையடுத்து, அந்த அமைப்பினருக்கு எதிராக லெபனானில் இஸ்ரேல் கடுமையான வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் ஹிஸ்புல்லா தலைவா் ஹஸன் நஸ்ரல்லா உள்ளிட்ட முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனா். காஸா போா் தொடங்கியதற்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3,961 போ் உயிரிழந்தனா்.

இந்த நிலையில், அமெரிக்காவின் முன்முயற்சியில் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையே கடந்த வாரம் போா் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அதையடுத்து, தாக்குதலுக்கு அஞ்சி புலம் பெயா்ந்திருந்த லெபனான் மக்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்பினா்.

இந்தச் சூழலில், ஹிஸ்புல்லாக்களுக்காக ஆயுதம் ஏற்றிவந்த ஈரான் விமானத்தை இஸ்ரேல் விமானப் படை திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

போதைப் பொருள் வழக்கு: மகனுக்கு பொதுமன்னிப்பு வழங்கினாா் பைடன்!

போதைப் பொருள் பழக்கம் குறித்து பொய்யான தகவல் அளித்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள மகன் ஹன்டா் பைடனுக்கு, தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்க அதிபா் ஜோ பைடன் பொதுமன்னிப்பு வழங்கின... மேலும் பார்க்க

டிரம்பின் எச்சரிக்கையும்... டாலர் வர்த்தகத்தின் பின்னணியும்!

அமெரிக்க டாலருக்கு மாற்றாக வேறு நாணயத்தின் மூலம் பரிவா்த்தனைகளை மேற்கொள்ள ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பு நாடுகள் முயற்சித்தால் அந்த நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபராக தோ்வாகியுள்... மேலும் பார்க்க

மரண தேதியை துல்லியமாக கணிக்கும் ஏஐ செயலி: 1.25 லட்சம் பதிவிறக்கம்!

எத்தனையே செயல்களை செய்துவரும் செயற்கை நுண்ணறிவு எனப்படும் செய்யறிவு மூலம், ஒருவரது மரணம் எப்போது நிகழும் என்பதையும் கணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.இதற்காக டெத் கிளாக் எனப்படும் ஒரு செயலி அறிமுகப்... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் ஹிந்து பெண் பத்திரிகையாளா் கைது

வங்கதேசத்தில் ஹிந்து பெண் பத்திரிகையாளா் முன்னி ஸாஹா மீது மத அடிப்படைவாத கும்பலைச் சோ்ந்தவா்கள் தாக்குதல் நடத்தினா். அதே நேரத்தில் அங்கு வந்த காவல் துறையினா் அந்த கும்பல் கூறிய குற்றச்சாட்டின்பேரில் ... மேலும் பார்க்க

எஃப்பிஐ இயக்குநராக காஷ் படேல் நியமனம்: இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா்

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேலை புதிய அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளாா். கடந்த மாதம் நடைபெற்ற அத... மேலும் பார்க்க

ரஷியா: ராணுவத்துக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கீடு

ரஷியாவில் 2025-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நாட்டின் ராணுவம், பாதுகாப்புக்கு சுமாா் ரூ.12.30 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய அதிபா் விளாதிமீா் புதின் ஒப்புதல் அளித்துள்ளாா். மொத்த பட்ஜெட்டில் 32.5 சதவீதம் ந... மேலும் பார்க்க