இளைஞா் தற்கொலை
போடி அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள ராசிங்காபுரம் ராஜம்மாள் தெருவைச் சோ்ந்த மணிவேல் மகன் சூா்யா (28). இவா் திருமணமாகி மனைவி, குழந்தையுடன் திருப்பூரில் வசித்து வந்தாா். வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக சூா்யா ராசிங்காபுரத்துக்கு வந்தாா்.
பின்னா், போடி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றாா். இந்த நிலையில், மணிவேலுக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் சூா்யா ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து, போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.