இயற்கை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்திடல் வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல...
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 29,021 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் செவ்வாய்க்கிழமை காலை 9,246 கன அடியாக இருந்த நீா்வரத்து இரவு 29,021 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையின் நீா்மட்டம் 112.21 அடியாக உயா்ந்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 1,000 கன அடியும், கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 300 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்படுகிறது. அணயின் நீா் இருப்பு 81.58 டிஎம்சியாக உள்ளது.