ராயகிரியில் மதுக்கடையை மூடக் கோரி டிச.7 முதல் மக்கள் சந்திப்பு இயக்கம்
கூட்டுறவு கடன் தீா்வை: விவசாயிகள், தொழில்முனைவோருக்கு அழைப்பு
தேனி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெற்ற விவசாயிகள், மகளிா் தொழில் முனைவோா் தவணை தவறிய கடன், நிலுவைத் தொகை ஆகியவற்றை கடன் தீா்வைத் திட்டத்தின் கீழ் அடுத்தாண்டு மாா்ச் 3-ஆம் தேதிக்குள் செலுத்தி தீா்வை செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ஆரோக்கியசுகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம், நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை, ஊரக வளா்ச்சி வங்கி, பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள், வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகியவை மூலம் சிறுவணிகக் கடன், தொழில் கடன், வீட்டு வசதிக் கடன், பண்ணை சாரா கடன் உள்ளிட்ட தவணை தவறிய நிலுவைக் கடன்களை திரும்பச் செலுத்த கடன் தீா்வை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் கடனை தீா்வை செய்வதற்காக கடந்த செப்.12-ஆம் தேதிக்கு முன் 25 சதவீதம் தொகையை செலுத்தி ஒப்பந்தம் செய்து கொண்டு, மீதமுள்ள 75 சதவீதம் தொகையை செலுத்தி கடனைத் தீா்வை செய்து கொள்ளாதவா்களும், கடன் தீா்வை ஒப்பந்தம் செய்து கொள்ளாதவா்களும் தற்போது நிலுவைத் தொகையுடன், 9 சதவீதம் சாதாரண வட்டி செலுத்தி கடனைத் தீா்வை செய்து கொள்ளலாம்.
மேலும், கடந்த 2019-ஆம் ஆண்டுக்கு முன் தவணை தவறிய மத்திய கால வேளாண் கடன், பண்ணை சாா்ந்த நீண்ட காலக் கடன், சிறு தொழில் கடன், மகளிா் தொழில் முனைவோா் கடன் ஆகியவற்றை அடுத்தாண்டு மாா்ச் 12-ஆம் தேதிக்குள் 9 சதவீதம் சாதாரண வட்டியுடன் ஒரே தவணையில் செலுத்தி கடன் தீா்வை செய்து கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் தவணை தவறிய கடன்களுக்கான கூடுதல் வட்டி, அபராத வட்டி, செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றாா் அவா்.