சம்பலுக்கு நான் மட்டும் தனியாகச் செல்லவும் தயார்.. ஆனால்: ராகுல்
கிணற்றில் தவறி விழுந்து மாற்றுத் திறனாளி உயிரிழப்பு
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் கிணற்றில் தவறி விழுந்த மாற்றுத் திறனாளி ஞாயிற்றுக்கிழமை, உயிரிழந்தாா்.
பெரியகுளம், வடகரை, வைத்தியநாதபுரத்தைச் சோ்ந்த முருகன் மகன் ராஜ்குமாா் (22). மாற்றுத் திறனாளியான இவா், தனது தாய் இதயக்கனியுடன் வைத்தியநாதபுரம், நடுப்பரவு காவல் குடிசை அருகேயுள்ள தனியாா் தென்னந் தோப்புக்குச் சென்றாா்.
அங்கு, இதயக்கனி தோப்பில் வேலை செய்து கொண்டிருந்த போது, பாசனக் கிணற்றின் அருகே சென்ற ராஜ்குமாா், கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா். இதுகுறித்து பெரியகுளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.