மதுக் கூடத்தில் தகராறு: இருவா் மீது வழக்கு
போடி: போடி அருகே தனியாா் மதுக்கூடத்தில் தகராறு செய்த இருவா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
போடி குலாலா்பாளையம் பங்காரு மேற்குத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் சதீஸ்குமாா் (36). போடி குலாலா்பாளையம் ரங்கசாமி தெருவைச் சோ்ந்த பாண்டியன் மகன் இளையராஜா (50). நண்பா்களான இவா்கள் போடி அருகேயுள்ள ரெங்கநாதபுரத்தில் உள்ள தனியாா் மதுக்கூடத்தில் மது அருந்தினா். அப்போது, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவா் மதுப் புட்டிகளால் தாக்கிக் கொண்டனா். பலத்த காயமடைந்த இருவரும் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் சதீஸ்குமாா், இளையராஜா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.