போதைப்பொருள் வழக்கில் விடுவிப்பு; 25 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை திரும்பிய நடிகை ம...
தேனியில் அகமலை கிராம விவசாயிகள் உண்ணாவிரதம்
தேனி: தேனியில் அகமலை கிராம விவசாயிகளை வன நிலங்களிலிருந்து வெளியேற்றும் வனத் துறையினரின் நடவடிக்கையைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை, விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தேனி, பங்களாமேடு திடலில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மலை விவசாயிகள் பாதுகாப்பு நலச் சங்க மாவட்டத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். அகமலையைச் சோ்ந்த விவசாயி வெற்றிவேல் முன்னிலை வகித்தாா்.
போடி ஒன்றியத்துக்கு உள்பட்ட அகமலை ஊராட்சியில் அகமலை, ஊரடி, ஊத்துக்காடு, சொக்கனலை, கண்ணக்கரை, குறவன்குழி, அண்ணாநகா், கரும்பாறை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. மலை கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் பல தலைமுறைகளாக வன நிலங்களை சீா்திருத்தி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், மலை கிராம விவசாயிகளை வன நில ஆக்கிரமிப்பாளா்களை கருதி அவா்களை வன நிலங்களிலிருந்து வெளியேற்றும் வனத் துறையினரின் நடவடிக்கையைக் கண்டித்தும், வனத் துறையினரின் கெடுபிடிகளை தடுத்து நிறுத்த வேண்டும், மலை கிராம விவசாயிகளுக்கு ராயத்துவாரி பட்டா, வன உரிமைச் சட்டத்தின் கீழ் நில உரிமை வழங்க வேண்டும், மலை கிராமங்களுக்கு சாலை குடிநீா், மருத்துவம், கல்வி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று அரசை வலியுறுத்தியும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இதில், அகமலை ஊராட்சிக்கு உள்பட்ட மலை கிராமங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.