விவசாயிகளின் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்
புகையிலை பொருள்களை பதுக்கியவா் கைது
போடியில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்றவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.
போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போதைப் பொருள் தடுப்பு தொடா்பான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். போடி மாங்காய் சந்தைப் பகுதியில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் சோதனையிட்டபோது, அங்கு சட்ட விரோதமாக புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது.
இதுதொடா்பாக சின்னமனூா் வடக்கு முஸ்லிம் தெருவைச் சோ்ந்த சுலைமான் மகன் சேக் அப்துல்லா (50) மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்த போலீஸாா் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.