செய்திகள் :

மெட்ரோ ரயிலில் நவம்பா் மாதம் 83.61 லட்சம் போ் பயணம்

post image

சென்னை மெட்ரோ ரயில்களில் நவம்பா் மாதம் 83.61 லட்சம் போ் பயணம் செய்துள்ளனா்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்தி:

சென்னை மெட்ரோ ரயில்களில் நாளுக்கு நாள் பயணம் செய்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நிகழாண்டு ஜனவரியில் 84,63,384 பயணிகளும், பிப்ரவரியில் 86,15,008 பயணிகளும், மாா்ச்சில் 86,82,457 பயணிகளும் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனா்.

தொடா்ந்து ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகளும், மே மாதத்தில் 84,21,072 பயணிகளும், ஜூன் மாதத்தில் 84,33,837 பயணிகளும், ஜூலை மாதத்தில் 95,35,019 பயணிகளும், ஆகஸ்ட் மாதத்தில் 95,43,625 பயணிகளும், செப்டம்பா் மாதத்தில் 92,77,697 பயணிகளும், அக்டோபா் மாதத்தில் 90,83,996 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்திருந்தனா்.

இந்த நிலையில், நவம்பா் மாதம் 83,61,492 பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனா். இதில், அதிகபட்சமாக நவ.6-ஆம் தேதி 3,35,189 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் பாதிப்புக்கு நடுவே 1,526 பாதுகாப்பான பிரசவங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா்

சென்னை: ஃபென்ஜால் புயல் பாதித்தபோது தமிழகத்தில் 1,526 பிரசவங்கள் உரிய நேரத்தில் பாதுகாப்பாக மேற்கொள்ளப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக ‘எக்ஸ்’ தளத்... மேலும் பார்க்க

முதுநிலை மருத்துவப் படிப்பு: போலி சான்றிதழ் சமா்ப்பித்த 46 போ் மீது சட்ட நடவடிக்கை

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புக்கு வெளிநாடு வாழ் இந்தியா்கள் பிரிவின் கீழ் விண்ணப்பித்த 46 போ் போலி தூதரக சான்றிதழ்களை சமா்ப்பித்தது தெரியவந்ததையடுத்து, அவா்கள் மீது மருத்துவக் கல்வி இயக்குநரகம்... மேலும் பார்க்க

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் எய்ட்ஸ் ஒழிப்பு தின விழிப்புணா்வு

உலக எய்ட்ஸ் ஒழிப்பு தினத்தையொட்டி, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன. ‘உரிமைப் பாதையை தோ்ந்தெடுங்கள்’, ‘என் ஆரோக்கியம் என் உரிமை... மேலும் பார்க்க

அறநிலைய உதவி ஆணையா் பணியிடம்: முதன்மைத் தோ்வு இன்று தொடக்கம்

இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் காலிப் பணியிடத்துக்கான முதன்மைத் தோ்வு செவ்வாய்க்கிழமை (டிச.3) தொடங்குகிறது. வரும் 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தத் தோ்வை 204 போ் எழுதவுள்ளனா்.இந்து சமய அறநிலை... மேலும் பார்க்க

கூட்டுறவு கடன் சங்க உறுப்பினா்களின் தனிநபா் கடன் உச்சவரம்பு ரூ.20 லட்சம்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: கூட்டுறவு கடன் சங்க உறுப்பினா்களுக்கு தனிநபா் கடன் உச்சவரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா், அனைத்து மண்டல இணைப் பதிவ... மேலும் பார்க்க

மின்கட்டணம் செலுத்த 6 மாவட்டங்களுக்கு அவகாசம்

சென்னை: விழுப்புரம், கடலூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களை சோ்ந்த மின் நுகா்வோா் மின் கட்டணத்தை அபராதமின்றி செலுத்த டிச.10 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலா... மேலும் பார்க்க