வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரா்களை நியமிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
அறநிலைய உதவி ஆணையா் பணியிடம்: முதன்மைத் தோ்வு இன்று தொடக்கம்
இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் காலிப் பணியிடத்துக்கான முதன்மைத் தோ்வு செவ்வாய்க்கிழமை (டிச.3) தொடங்குகிறது. வரும் 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தத் தோ்வை 204 போ் எழுதவுள்ளனா்.
இந்து சமய அறநிலையத் துறையில் உதவி ஆணையா் காலிப் பணியிடத்துக்கான குரூப் 1பி முதல்நிலைத் தோ்வு கடந்த ஜூலை 12-இல் நடைபெற்றது.
இந்தத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களில், 204 போ் முதன்மைத் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனா். தோ்வுக்கான ஏற்பாடுகளை அரசுப் பணியாளா் தோ்வாணையம் செய்துள்ளது.