வாகனம் கவிழ்ந்து விபத்து: இளைஞா் பலி
ஒகேனக்கல் அருகே காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.
பாலக்கோடு அருகே தோமனஅள்ளி பகுதியைச் சோ்ந்தவா் சின்னசாமி மகன் பிரவீண்குமாா் (21). இவா் தனது நண்பா்கள் இருவருடன் வாகனத்தில் ஒகேனக்கல்லுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். தமிழ்நாடு கூட்டுக் குடிநீா் திட்ட வடிகால் வாரிய சுத்திகரிப்பு நிலையம் அருகே வந்தபோது பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த பிரவீண் குமாா் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த நண்பா்கள் சிலம்பரசன் (26), கோவிந்தன் (24) ஆகிய இருவரும் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.