சென்னை - ராமேஸ்வரம் ரயில் இன்று புறப்படும் நேரம் மாற்றம்!
சென்னை - ராமேஸ்வரம் ரயில் இன்று 2 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகி கரையைக் கடந்த ஃபென்ஜால் புயலால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்துள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதால் நேற்று ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரும்பாலான ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இதையும் படிக்க | நிவாரணப் பணிகளில் உதவுங்கள்: காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்!
இந்நிலையில் சென்னை - ராமேஸ்வரம் ரயில் இன்று 2 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இணைப்புப் பெட்டிகள் தாமதமாக வந்ததால் சென்னை எழும்பூரில் இருந்து இன்று(டிச. 3) இரவு 7.15 மணிக்குப் புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்(16751), 2 மணி நேரம் தாமதமாக, 9.15 மணிக்குப் புறப்படும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.