செய்திகள் :

செந்தில் பாலாஜி அமைச்சரானதில் எந்த அவசரமும் இல்லை: சட்ட அமைச்சர் ரகுபதி

post image

புதுக்கோட்டை: செந்தில் பாலாஜி அமைச்சரானதில் எந்த அவசரமும் இல்லை என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி புதன்கிழமை தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஜாமீன் கிடைத்தவுடன் அமைச்சராகிவிட்டீா்கள், வழக்கில் சம்மந்தப்பட்டவா் அமைச்சரானால், வழக்கின் சாட்சிகள் பயப்படுவாா்கள் என்று மனுதாரரின் குற்றச்சாட்டில் நியாயம் உள்ளதால், செந்தில் பாலாஜி தரப்பு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், புதுக்கோட்டையில் புதன்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்ததாவது:

“செந்தில்பாலாஜி அமைச்சர் பொறுப்பேற்றது பற்றி நீதிமன்றத்தின் கருத்து குறித்து கேட்கிறீர்கள். ஒருவரை அமைச்சராக்குவது, நீக்குவது முதல்வரின் முழு உரிமை. அவசரமாக அமைச்சர் பதவி எதுவும் கொடுக்கப்படவில்லை.

கைது செய்யப்படும்போதும் அவர் அமைச்சர்தான், சிறையில் இருக்கும் காலத்தில் அமைச்சராகத்தான் இருந்தார். இப்போது வெளியே வந்த பிறகு அமைச்சராக்கப்பட்டிருக்கிறார்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க : ஜாமீன் பெற்றவுடன் அமைச்சராகப் பதவியேற்ற விவகாரம்! செந்தில் பாலாஜி விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

தொடர்ந்து புயல் பாதிப்பு குறித்து அமைச்சர் பேசியதாவது:

“சென்னையில் மழை நின்ற 5, 6 மணி நேரங்களில், தேங்கிய மழை நீரை முழுமையாக அகற்றி இயல்பு நிலை திரும்பச் செய்திருக்கிறோம். 

சாத்தனூர் அணை முறைப்படி அறிவிப்பு வெளியிடப்பட்டு படிப்படியாகத்தான் திறக்கப்பட்டது. அதிக மழை பெய்ததால், தென்பெண்ணையாற்றில் மிக அதிக தண்ணீர் வந்து சில பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டபோது ஏற்பட்ட உயிரிழப்புகளைப் போல, நேரிடாமல் கவனமாக செயல்பட்டிருக்கிறோம்.

ரூ. 2 ஆயிரம் குறைவு எனப் பலரும் கூறுகிறார்கள். நிவாரண உதவிப் பொருள்களை கூடுதலாக வழங்கத் திட்டமிட்டிருக்கிறோம்.

இதுபோன்ற பேரிடர்களில் மத்திய அரசு இதுவரை நமக்கு செய்ய வேண்டிய உதவியைச் செய்யவில்லை. இந்த முறை வேண்டிய உதவிகளை அவர்கள் செய்ய இருப்பதாக தகவல் வந்துள்ளது. பொருந்திருந்து பார்ப்போம்.

எல்லாவற்றுக்கும் காவி நிறம் பூச வேண்டாம் என விஜய் சொல்லியிருக்கிறார். மத்திய அரசு தனது பணியைச் செய்யாவிட்டால் அவர்களைத்தானே குறை சொல்ல முடியும், வேறு யாரைச் சொல்வது. மத்திய அரசின் அடையாளம்தானே காவி நிறம்?

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்து கொள்ளாததற்கு, திமுக கொடுத்த அழுத்தம்தான் என அன்புமணி ராமதாஸ் கருத்து சொல்லியிருக்கிறார். திருமாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய தேவை திமுகவுக்கு இல்லை.

அவராக முடிவெடுத்து இருக்கிறார். இதில் அன்புமணிக்கு என்ன கவலை?” என்றார் ரகுபதி

சிங்காரச் சென்னையை கட்டியெழுப்புவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

எதிா்கால கட்டமைப்புகளை உருவாக்கி, சென்னை நகரத்தை சிங்காரச் சென்னையாக கட்டி எழுப்புவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா். வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவ... மேலும் பார்க்க

விளையாட்டை ஊக்குவிக்கும் மாநிலமாக தமிழகத்துக்கு விருது: முதல்வா் பாராட்டு

விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலத்துக்கான விருதைப் பெற்ற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தாா். இந்திய வா்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு... மேலும் பார்க்க

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ திட்டம்: முதல்வா் ஆலோசனை

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இ... மேலும் பார்க்க

மாநிலக் கல்லூரியில் புதிய விடுதிக் கட்டடங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட விடுதிக் கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். சென்னை மாநிலக் கல்லூரியில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ம... மேலும் பார்க்க

ஈரோடு - சம்பல்பூா் ரயில் சேவை நீட்டிப்பு

ஈரோடு - சம்பல்பூா், சென்னை எழும்பூா் - விசாகப்பட்டினம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை மாா்ச் மாதம் வரை நீட்டிக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழ... மேலும் பார்க்க

தோழர் பினராயி விஜயனுக்கு நன்றி! -முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஃபென்ஜால் புயலால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமாலை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கண்ட பகுதிகளில் பல்வேறு இடங்களிலும் வெள்... மேலும் பார்க்க