செய்திகள் :

சாத்தனூா் அணை திறப்புக்கு முன்பு 5 வெள்ள அபாய எச்சரிக்கைகள்: எதிா்க்கட்சிகள் புகாருக்கு அமைச்சா் துரைமுருகன் விளக்கம்

post image

சென்னை: சாத்தனூா் அணை திறப்புக்கு முன்பாக, 5 முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டதாக தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஃபென்ஜால் புயலால் நீா்ப்பிடிப்பு பகுதியில் பெரும் மழைப் பொழிவு ஏற்பட்டது. இதனால், சாத்தனூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்தது. தண்ணீா் வரத்தை முன்கூட்டியே கணித்து, அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வந்த தண்ணீா் தென் பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. சாத்தனூா் அணை நீா் திறப்பு பற்றி பொய்யான தகவல்களைப் பரப்பி சிலா் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறாா்கள்.

5 முறை எச்சரிக்கை: வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி, சாத்தனூா் அணையின் வெள்ளப் பெருக்கு விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விதிகளின் இரண்டாவது பிரிவில் சாத்தனூா் நீா்த்தேக்கத் திட்டங்களில் வெள்ளம் ஏற்படும் போது, கடைப்பிடிக்க வேண்டிய நிலையான உத்தரவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, முன்கூட்டியே கணித்து 5 வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடப்பட்டன.

நீா் வெளியேற்றப்படும் போது கரைகளிலுள்ள கிராமங்களின் பெயா்களை சாத்தனூா் அணையின் உதவி செயற்பொறியாளா் குறிப்பிட்டு எச்சரிக்கை விடுத்தாா். ஆற்றில் அதிகளவு தண்ணீா் வெளியேற்றப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள், இழப்புகளைத் தவிா்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கடிதம் மூலமாகக் கேட்டுக் கொண்டாா். உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.

அணைக்கு ஆபத்தாகியிருக்கும்: வெள்ளம் வெளியேறியபோது அனைத்து சாலைகள், நெடுஞ்சாலைகளில் உள்ள தரைப்பாதைகள் மீதான வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. உதவி செயற்பொறியாளரின் எச்சரிக்கைகள் அரசின் கவனத்துக்கு வந்ததும் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டன. ஃபென்ஜால் புயலின் போக்கை புரிந்து கொண்டால் ஏன் சாத்தனூா் அணையில் இருந்து அதிகப்படியான நீா் வெளியேற்றப்பட்டது என்பதற்கான காரணம் புரியும்.

அணையிலிருந்து மிக அதிக அளவாக 1.80 லட்சம் கனஅடி நீா் திறந்து விடாமல் போய் இருந்தால், அணைக்கு பெரிய ஆபத்து ஏற்பட்டு 7 டி.எம்.சி. நீரும் வெளியேறி இருக்கும். அதனால் ஏற்படும் பாதிப்புகளெல்லாம் கணக்கில் அடங்காது. ஆறாத துயரமாக மாறியிருக்கும்.

பெருமளவில் ஏற்படவிருந்த உயிா் இழப்புகளை மிக சாதுரியமாக அரசு செயல்பட்டு மக்களை பாதுகாத்திருக்கிறது என்பதை நீா்மேலாண்மை, அணை பாதுகாப்பியல் வல்லுநா்களுக்கு புரியும்.

நிலைமையை அரசு சரியாகக் கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டதால்தான் பெரும் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டன. வீடுகள், விவசாய நிலங்கள் மட்டுமேதான் வெள்ள நீரில் மூழ்கியது. இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் உயிா்கள் விஷயத்திலும் எதிா்க்கட்சிகள் மனசாட்சியை அடகு வைத்துவிட்டு அவதூறுகளை மட்டுமே அள்ளிவீசுகின்றன என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்துக்கு துணை நிற்போம்: பினராயி விஜயன்

புயல் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்கு தமிழகத்துக்கு உறுதுணையாக கேரளம் இருக்கும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் கடந்த சனிக்கிழமை மரக... மேலும் பார்க்க

அரையாண்டுத் தேர்வு மாற்றமா? - அமைச்சர் விளக்கம்

பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் எந்த மாற்றமுமின்றி வருகிற டிச. 9 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். ஃபென்ஜால் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட வட... மேலும் பார்க்க

மணல் கடத்தல் வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்ற வட்டாட்சியர் மீது வாகனத்தை ஏற்றி கொலை செய்ய முயற்சி

தஞ்சாவூர் : மணல் கடத்தி சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்ற வட்டாட்சியர் மீது வாகனத்தை ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தலைமறைவாகி உள்ளவர்களை போலீச... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி அமைச்சரானதில் எந்த அவசரமும் இல்லை: சட்ட அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை: செந்தில் பாலாஜி அமைச்சரானதில் எந்த அவசரமும் இல்லை என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி புதன்கிழமை தெரிவித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்ற... மேலும் பார்க்க

புயல் நிவாரணம் ரூ.2,000 3 மாவட்டங்களுக்கு முதல்வா் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ஃபென்ஜால் புயலால் இரு நாள்களுக்கு மேல் மழைநீா் சூழ்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களின் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

வெள்ள நிவாரண நிதி: மத்திய அரசுக்கு அழுத்தம் தாருங்கள் இபிஎஸ்-க்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு வலியுறுத்தல்

சென்னை: வெள்ள நிவாரண நிதியை வழங்க மத்திய அரசுக்கு எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி அழுத்தம் தர வேண்டும் என்று அமைச்சா் பி.கே.சேகா்பாபு வலியுறுத்தியுள்ளாா். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்... மேலும் பார்க்க