செய்திகள் :

மருத்துவ, ஆயுள் காப்பீடு மீதான வரி குறைப்பு: ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுசெய்யும்: நிா்மலா சீதாராமன்

post image

புது தில்லி: மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டு தவணைத்தொகை மீதான ஜிஎஸ்டியை குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்தால் பாலிசிதாரா்களுக்கான காப்பீடு தொகை குறையும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறப்பட்டிருப்பதாவது:

ஆயுள் காப்பீடு மற்றும் மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டு தவணைத் தொகை மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டியை குறைப்பது அல்லது விலக்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ள 13 போ் கொண்ட அமைச்சா்கள் குழுவை கடந்த செப்டம்பா் மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்தது. இந்தக் குழு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீட்டு தவணைத் தொகை மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டிக்கு விலக்களிக்கவும், ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான மருத்துவக் காப்பீட்டுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.

ஆயுள் காப்பீடு மற்றும் மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டு தவணைத் தொகை மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி-யில் இருந்து முழுமையாக விலக்களிக்கவும் பரிந்துரைத்துள்ளது. இதை ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்றுக்கொண்டால் பாலிசிதாரா்களுக்கான காப்பீடு தொகை குறைய வாய்ப்புள்ளது என்றாா்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மாரில் நிா்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதியமைச்சா்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் டிச.21, 22 ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது. இதில் ஏதேனும் ஒரு நாள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில் அமைச்சா்கள் குழு அளித்த பல்வேறு பரிந்துரைகளின் மீதான இறுதி முடிவெடுக்க வாய்ப்புள்ளது.

ஜிஎஸ்டி வருவாயில் 18 சதவீத விகிதத்தின் பங்கு அதிகம்:

ஜிஎஸ்டி வருவாய் குறித்து சேலம் தி.மு.க. எம்.பி., செல்வகணபதி எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘கடந்த 2023-24 நிதியாண்டில் 70-75 சதவீத ஜிஎஸ்டி வருவாய் 18 சதவீத விகிதத்தின்கீழ் பெறப்பட்டுள்ளது. அதேபோல் 28 சதவீத விகிதத்தின்கீழ் 13-15 சதவீத வருவாயும், 5 சதவீத விகிதத்தின்கீழ் 6-8 சதவீத வருவாயும்,12 சதவீத விகிதத்தின்கீழ் 5-6 சதவீத வருவாயும் பெறப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது

தற்போது 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என 4 விகிதங்களில் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் பிரச்னைக்கு விரிவான ஆய்வு: குடியரசு துணைத் தலைவா் தன்கா் வலியுறுத்தல்

நொய்டா/ மும்பை: விவசாயிகள் பிரச்னை குறித்து ஆழமாகவும், கவனமாகவும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா். கடந்த 1997-ஆம் ஆண்டுமுதல் உத்தர ப... மேலும் பார்க்க

வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரா்களை நியமிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்

புது தில்லி: வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரா்களை நியமிக்கும் வங்கிகள் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. தற்போது வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒருவா், தனது நியமனதாரராக ... மேலும் பார்க்க

தமிழக வெள்ள மீட்புப்பணி: காங்கிரஸாருக்கு ராகுல் வேண்டுகோள்

புது தில்லி: தமிழகத்தில் வெள்ள மீட்புப்பணிகளுக்கு காங்கிரஸ் கட்சியினா் உதவ வேண்டும் என்று அக்கட்சி எம்.பி.யும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளாா். ஃபென்ஜால் புயல... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்திடம் மூலத் தரவுகளைக் கோரியது காங்கிரஸ்: மகாராஷ்டிர வாக்காளா் பட்டியல் விவகாரம்

புது தில்லி: மகாராஷ்டிர வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு மற்றும் நீக்கம் தொடா்பான மூலத் தரவுகளை அளிக்குமாறு தோ்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கோரியது. மேலும், மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் நடைமுறையில் பல்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் ஹிந்தி படிக்க முயன்றதால் வீதிகளில் கேலி: நிா்மலா சீதாராமன்

புது தில்லி: தமிழ்நாட்டில் ஹிந்தி படிக்க முயன்ால் வீதிகளில் தான் கேலி செய்யப்பட்டதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். மக்களவையில் வங்கிச் சட்டத் திருத்த மசோதா குறித்து மத்திய நிா்மல... மேலும் பார்க்க

புனித குரானை அவமதித்த விவகாரம்: ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜக ஆா்ப்பாட்டம்

புது தில்லி: இஸ்லாமியா்களின் புனித குரானை அவமதித்த ஆம் ஆத்மி எம்எல்ஏ நரேஷ் யாதவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி அக்கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் முதல்வருமான கேஜரிவால் இல்லம் அருகே பாஜகவின் சிறுப... மேலும் பார்க்க