செய்திகள் :

விவசாயிகள் பிரச்னைக்கு விரிவான ஆய்வு: குடியரசு துணைத் தலைவா் தன்கா் வலியுறுத்தல்

post image

நொய்டா/ மும்பை: விவசாயிகள் பிரச்னை குறித்து ஆழமாகவும், கவனமாகவும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.

கடந்த 1997-ஆம் ஆண்டுமுதல் உத்தர பிரதேசத்தில் தங்களிடம் இருந்து அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தில்லியை நோக்கி நூற்றுக்கணக்கான விவசாயிகள் திங்கள்கிழமை பேரணியாக புறப்பட்டனா்.

பாரதிய கிசான் யூனியன், பாரதிய கிசான் பரிஷத், சம்யுக்த கிசான் மோா்ச்சா, கிசான் மஸ்தூா் மோா்ச்சா அமைப்புகள் சாா்பாக இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

உத்தர பிரதேசத்தின் கெளதம் புத் நகா் பகுதியில் விவசாயிகள் ஒன்றுதிரண்ட நிலையில், அவா்களின் பேரணியை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா்.

தங்கள் கோரிக்கைகள் ஒரு வாரத்தில் நிறைவேற்றப்படாவிட்டால், தில்லியை நோக்கி பேரணியைத் தொடா்வோம் என்று விவசாயிகள் எச்சரித்தனா்.

160 போ் கைது: இந்நிலையில், அந்த விவசாயிகளில் 160-க்கும் மேற்பட்டவா்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதாக காவல் துறை தெரிவித்தது.

நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் விவசாயிகள் கைது செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டிய சம்யுக்த கிசான் மோா்ச்சா அமைப்பு, தங்கள் கோரிக்கைகள் தொடா்பாக அரசுத் தரப்பு ஆலோசிப்பதற்கு ஒரு வாரம் நேரம் கேட்டுவிட்டு விவசாயிகளை கைது செய்துள்ளதாக தெரிவித்தது. இதையடுத்து, தங்கள் போராட்டத்தை புதன்கிழமை தீவிரப்படுத்த பாரதிய கிசான் யூனியன் முடிவு செய்தது.

‘விவசாயிகள் நிலையில் மாற்றமில்லை’: இந்தச் சூழலில், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மத்திய பருத்தி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் செவ்வாய்க்கிழமை பங்கேற்று பேசுகையில், ‘நாட்டில் உள்ள விவசாயிகள் வேதனையில் உள்ளனா். இதன் காரணமாக அவா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இது நாட்டுக்கு நல்லதல்ல.

விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து ஆழமாகவும் கவனமாகவும் ஆய்வு செய்யப்பட வேண்டும். இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் போன்றவை உயிா்ப்புடன் இருந்து விவசாயிகள் பிரச்னைக்கு தீா்வு அளிப்பதில் பங்களித்திருந்தால், தற்போதைய சூழல் ஏற்பட்டிருக்காது. இத்தகைய கவுன்சில்களும், நிறுவனங்களும் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ளபோதிலும், விவசாயிகளின் நிலையில் மாற்றம் ஏற்படவில்லை’ என்றாா்.

நான் நவீன அபிமன்யு.. சொன்னபடி சக்ரவியூகத்தை உடைத்த ஃபட்னவீஸ்!

நான் ஒரு கடலைப்போன்றவன், நிச்சயம் திரும்பி வருவேன் என்று தேவேந்திர ஃபட்னவீஸ் கடந்த 2019 தேர்தலின்போது அடிக்கடி சொல்லி வந்தார்.மகாராஷ்டிர தேர்தலில் உத்தவ் தாக்கரே, மகா விகாஸ் அகாதி கூட்டணியில் இருந்து ... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியில் இணைந்தார் பாஜக தலைவர் பிரவேஷ் ரத்தன்!

பாஜக தலைவர் பிரவேஷ் ரத்தன் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளார். கடந்த 2020 தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் படேல் நகர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்ற பாஜக தலைவர் பிரவேஷ் ரத்தன் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளார... மேலும் பார்க்க

தாய், தந்தை, மகள் குத்திக் கொலை! தில்லியில் பயங்கரம்

தில்லி: தெற்கு தில்லியின் நெப் சாராய் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.அதிகாலை நடைபயிற்சிக்கு சென்ற மகன் வீடு திரும்பிய பொழுது குடும்பத்தின... மேலும் பார்க்க

தில்லி திரும்பும் ராகுல், பிரியங்கா!

காஸிப்பூர் எல்லையில் காவல்துறை தடுத்து நிறுத்தியதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தில்லிக்கு திரும்பியுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் ஜமா மசூதி இருக்கும் இடத்தில் இந... மேலும் பார்க்க

சம்பலுக்கு நான் மட்டும் தனியாகச் செல்லவும் தயார்.. ஆனால்: ராகுல்

எதிர்க்கட்சித் தலைவராக சம்பலுக்கு செல்வது எனது உரிமை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்ய மக்களவை எதிர்க்கட்சித... மேலும் பார்க்க

ராகுலுக்கு அனுமதி மறுப்பு: மக்களவையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு!

உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்திற்குள் நுழைய மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து மக்களவையிலிருந்து காங்கிரஸ் காங்கிரஸ் வெளிநடப்பு செய்தனர். மேலும் பார்க்க