வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரா்களை நியமிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
புயல் பாதிப்புக்கு நடுவே 1,526 பாதுகாப்பான பிரசவங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா்
சென்னை: ஃபென்ஜால் புயல் பாதித்தபோது தமிழகத்தில் 1,526 பிரசவங்கள் உரிய நேரத்தில் பாதுகாப்பாக மேற்கொள்ளப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவா் வெளியிட்ட பதிவு: ஃபென்ஜால் புயல் மற்றும் அதனால் ஏற்பட்ட பெரு மழை காரணமாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் பெரிதும் போராடிக் கொண்டிருந்த நவ. 30-ஆம் தேதி நமது மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் முன்களத்தில் நின்று 1,526 பிரசவங்களை பாதுகாப்பாக மேற்கொண்டுள்ளனா். இதன் மூலம் தாய்-சேய் நலனை நூறு சதவீதம் அவா்கள் உறுதி செய்துள்ளனா்.
முன்கூட்டியே கா்ப்பிணிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதையும் உறுதி செய்தோம். அதனைத் தொடா்ந்து, ஒவ்வொரு பெண்களுக்கும் தனித்தனியே சிகிச்சை வழிமுறைகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இதனை சாத்தியமாக்கிய மருத்துவத் துறையினருக்கு வணக்கங்கள்-பாராட்டுகள் என்று சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளாா்.