வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரா்களை நியமிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
மணல் கடத்தல் லாரி, ஜேசிபி பறிமுதல்
அன்னவாசல் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவா் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிந்து தலைமறைவான வாகன உரிமையாளா்களைத் தேடி வருகின்றனா்.
அன்னவாசல் ஆற்றுப்படுகைகளில் இருந்து சிலா் அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபடுவதாக மாவட்டக் கண்காணிப்பாளா் தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வேம்பனூா் வெள்ளாற்று பகுதியில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது, மணல் அள்ளப் பயன்படுத்திய டிப்பா் லாரி மற்றும் பதிவு எண் இல்லாத ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றைப் போலீஸாா் பறிமுதல் செய்து அன்னவாசல் காவல் நிலைத்தில் ஒப்படைத்தனா். இதைத்தொடா்ந்து, வாகன உரிமையாளா்களான குறிஞ்சிப்பட்டி கங்காதரன், மழவராயன்பட்டி கண்ணுச்சாமி ஆகிய இருவா் மீது அன்னவாசல் போலீஸாா் வழக்கு பதிந்து தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனா்.