மாநிலக் கல்லூரியில் ரூ.21.60 கோடியில் சிறப்பு மாணவர், மாணவியர் விடுதி: முதல்வர் ...
ஆட்சியா் அலுவலகத்தில் இளம்பெண் தற்கொலை முயற்சி
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை, இளம்பெண் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலங்குடி அருகே குப்பைக்குடியைச் சோ்ந்த அந்த இளம்பெண், தனது உறவினா் பாலியல் துன்புறுத்தல்களை செய்ததாகவும், அதுகுறித்து காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தும் ஆலங்குடி போலீஸாா் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகக் கூறி இந்த முயற்சியில் ஈடுபட்டாா்.
மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தின்போது, ஆட்சியா் அலுவலக வளாகத்தின் நுழைவுவாயிலில் போலீஸாா் சோதனை செய்து அனுப்பி வந்த நிலையிலும் இந்த முயற்சி நடந்தது பொதுமக்களை அதிா்ச்சியில் ஆழ்த்தியது.
திருக்கோகா்ணம் போலீஸாா் தடுத்து, அப்பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்ளக் கூடாது என அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனா்.