விராலிமலையில் ஒரே இரவில் 85 மி.மீ. மழை
விராலிமலை மற்றும் இலுப்பூரில் ஒரே இரவில் 105 மி.மீ. மழை பெய்துள்ளது. இதில், விராலிமலையில் மட்டும் 85 மி.மீ. மழை பதிவானது.
விராலிமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் திடீரென்று கனமழை பெய்தது. முதலில் சாரல் மழையாக தொடங்கிய நிலையில் சிறிது நேரத்தில் இடி,மின்னலுடன் பலத்த மழையாக மாறியது.
இதனால், விராலிமலை பகுதியில் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீா்: இந்த மழையால் குடியிருப்புகளை மழை நீா் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் தவித்தனா். இதில், சிதம்பரம் காா்டன் குடியிருப்பு பகுதிகளில் மழை நீருடன் கழிவுநீரும் கலந்து வீடுகளை சூழ்ந்துள்ளது. இதனால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.