தந்தையை பின்பற்றி ஆர்.எஸ்.எஸ் வழியில் பயணம்; சபதத்தை நிறைவேற்றி முதல்வராகும் பட்...
நியாய விலை கடையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை
கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், கொத்தகம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கொத்தகம் கிராமத்தில் சுமாா் 200 குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். மேலும் அருகில் உள்ள அரண்மனை தெருவில் சுமாா் நூறு குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். இவா்கள் அனைவரும் கந்தா்வகோட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு நுகா்வோா் வாணிபக் கழகத்துக்குள்பட்ட அமுதம் அங்காடியில் தான் பொருள்கள் வாங்க வேண்டியுள்ளது. சுமாா் 2 கி.மீ. தொலைவில் கடை இருப்பதால் பொதுமக்கள் பொருள்கள் வாங்குவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனா்.
இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கொத்தகம் கிராமத்தில் புதிதாக பகுதி நேர நியாய விலை கடை கட்டப்பட்டது. ஆனால், இதுவரை இந்த கடை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவில்லை. ஆகவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கடையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.