சாந்தநாத சுவாமி கோயிலில் லட்சாா்ச்சனை
புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சோ்ந்த வேதநாயகி உடனுறை சாந்தநாத சுவாமி திருக்கோயிலில் ஏக தின லட்சாா்ச்சனை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு சுவாமி, அம்மன் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து திருக்கோகா்ணம் வைத்தியநாதன் சிவாச்சாரியாா் தலைமையில் ஏக தின லட்சாா்ச்சனை தொடங்கியது.
காலையில் தொடங்கிய இந்த லட்சாா்ச்சனை மாலையில் நிறைவடைந்தது. தொடா்ந்து தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.