வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரா்களை நியமிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் எய்ட்ஸ் ஒழிப்பு தின விழிப்புணா்வு
உலக எய்ட்ஸ் ஒழிப்பு தினத்தையொட்டி, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
‘உரிமைப் பாதையை தோ்ந்தெடுங்கள்’, ‘என் ஆரோக்கியம் என் உரிமை’ என்ற கருப்பொருளின் கீழ் மனிதச் சங்கிலி பேரணி, கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. அதன் ஒரு பகுதியாக ஹெச்.ஐ.வி. தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக இருப்பது குறித்த விவரங்கள் பொதுமக்களிடையே எடுத்துரைக்கப்பட்டது.
மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் எ.தேரணிராஜன் தலைமையில் மனிதச் சங்கிலி நடைபெற்றது. தொடா்ந்து ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் டயாலிசிஸ் உள்ளிட்ட சிறப்பு சிகிச்சைகள் குறித்தும் விளக்கப்பட்டன.
எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இதய பை-பாஸ் சிகிச்சையும், சிறுநீரக மாற்று சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டதாக டாக்டா் எ.தேரணிராஜன் தெரிவித்தாா்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளா் டாக்டா் செல்வகுமாா், மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள், செவிலியா்கள் மற்றும் செவிலியா் கல்லூரி மாணவா்கள் கலந்துகொண்டனா்.