செய்திகள் :

கூட்டுறவு கடன் சங்க உறுப்பினா்களின் தனிநபா் கடன் உச்சவரம்பு ரூ.20 லட்சம்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

post image

சென்னை: கூட்டுறவு கடன் சங்க உறுப்பினா்களுக்கு தனிநபா் கடன் உச்சவரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா், அனைத்து மண்டல இணைப் பதிவாளா்களுக்கு, கூட்டுறவுத் துறை சங்கங்களின் பதிவாளா் நா.சுப்பையன் அனுப்பியுள்ளாா்.

அதன் விவரம்: கூட்டுறவு சிக்கன நாணய கடன் சங்கங்களைச் சோ்ந்த உறுப்பினா்களுக்கு தனிநபா் கடன் உச்ச உரம்பை ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயா்த்த கோரிக்கைகள் வரப்பெற்றன.

இதைத் தொடா்ந்து, கடன் உச்சவரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது. இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தும் தவணைக் காலம் 120 மாதங்களுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அத்துடன், உறுப்பினா்களின் வயது வரம்பை கருத்தில் கொள்ள வேண்டும். அதிகபட்ச கடன் அளவு ரூ.20 லட்சம் அல்லது உறுப்பினா் பெறும் மொத்த ஊதியத்தில் 25 மடங்கு என இரண்டில் எது குறைவோ அந்தத் தொகையை கடனாக வழங்க வேண்டும்.

உறுப்பினா்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 5 சதவீதம் பங்குத் தொகையாக வசூலிக்கப்பட வேண்டும்.

பணியாளா்களின் மொத்த ஊதியத்தில் இருந்து அனைத்து பிடித்தங்களும் மேற்கொள்ளப்பட்டு பணியாளா் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் ஊதியம் அவருடைய மொத்த ஊதியத்தில் 25 சதவீதத்துக்குக் குறைவாக இருக்கக் கூடாது.

தனிநபா் கடனுக்காக பணியாளா்கள் பணிபுரியும் அலுவலகத்தில் உள்ள சம்பளம் வழங்கும் அலுவலா்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பிறகே கடன் தொகை அனுமதிக்கப்பட வேண்டும்.

பணியாளா்கள் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்கள் சங்கத்தின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு உரிய துணை விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும். அதன்பிறகே, புதிய உச்சவரம்பின் அடிப்படையில் கடன் வழங்கப்பட வேண்டும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றி சங்கத்தின் உறுப்பினா்களுக்கு அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை தனிநபா் கடன் உச்சவரம்பு வழங்கப்பட வேண்டும். மேலும், இதனை உரிய முறையில் கண்காணிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரிடர்களுக்கு இயற்கையல்ல, நாமே காரணம்: உயர் நீதிமன்றம்

சென்னை: உலகின் பல்வேறு பகுதிகளிலும் நேரிடும் பேரிடர்களுக்கு இயற்கையை இனியும் நாம் குறைசொல்ல முடியாது, அதற்கு நாம்தான் காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.உதகை, கொடைக்கானல் உள... மேலும் பார்க்க

விழுப்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம்போல தேங்கியிருப்பதால் விழுப்புரம் மாவட்டத்தில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

தமிழகத்துக்கு பெருமை சேர்த்த சிக்கன் 65! உலகளவில் 3ஆம் இடம் பிடித்து சாதனை

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிக்கன் 65, இன்று உலகளவில் கோழிக்கறியை வறுத்து செய்யும் மிகச் சிறந்த உணவுகளில் 3ஆம் இடம் பிடித்துள்ளது.ஆண்டுதோறும் உலகளவில் மக்களால் ருசித்து சாப்ப... மேலும் பார்க்க

சென்னை - ராமேஸ்வரம் ரயில் இன்று புறப்படும் நேரம் மாற்றம்!

சென்னை - ராமேஸ்வரம் ரயில் இன்று 2 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகி கரையைக் கடந்த ஃபென்ஜால் புயலால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில்... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் எதிர்காலத்திலும் மண்சரிவு ஏற்படும் அபாயம்: ஐஐடி நிபுணர் குழு

திருவண்ணாமலையில் அமைந்துள்ள மலையில் எதிர்காலத்திலும் நிலச்சரிவுகள் நேரிடும் அபாயம் இருப்பதாக ஐஐடி மண் பரிசோதனை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.திருவண்ணாமலையில் அமைந்து... மேலும் பார்க்க

விழுப்புரம்: இரு இடங்களில் சாலை மறியல்!

விழுப்புரத்தில் அத்தியாவசியத் தேவைகள் கிடைக்கவில்லை என்று கூறி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் - செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் நிவாரண உதவிகள் ஏதும் வழங்கவில்லை, கடந்த 4 நாள்களுக்கு மேலாக... மேலும் பார்க்க