வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரா்களை நியமிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
திருச்செந்தூா் பகுதியில் அங்கன்வாடி மையங்கள் திறப்பு
திருச்செந்தூா் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் வீரபாண்டியன்பட்டினம் (ஊரகம்) ஊராட்சி முத்து நகரில் ரூ.16.55 லட்சம் மதிப்பிலும், பள்ளிப்பத்து ஊராட்சி குடியிருப்புவிளை பகுதியில் ரூ.13.57 லட்சம் மதிப்பிலும் அங்கன்வாடி மைய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
அதே போல் வீரபாண்டியன்பட்டினம் ஊராட்சி பிரசாத் நகரில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 22 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினாா்.
நிகழ்ச்சியில், திருச்செந்தூா் நகா்மன்ற துணைத் தலைவா் செங்குழி ரமேஷ், ஊராட்சித் தலைவா்கள் எல்லமுத்து, வசந்தி, அதிகாரிகள், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
நியாயவிலைக் கடை: அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் மேலாத்தூரில் ரூ.9.45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடையை ஊராட்சித் தலைவா் சதீஷ்குமாா் தலைமையிலும், ராஜபதி ஊராட்சியில் ரூ.9.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடையையும் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
இதில் ராஜபதி ஊராட்சித் தலைவா் சவுந்தர்ராஜன், அதிகாரிகள், கட்சி நிா்வாவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.