6 நாள்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்ற தூத்துக்குடி மீனவா்கள்
சூறாவளி காற்று எச்சரிக்கை காரணமாக 6 நாள்களுக்குப் பிறகு தூத்துக்குடி மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்குச் சென்றனா்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மன்னாா் வளைகுடா, தமிழக கடல் பகுதிகளில் மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
எனவே, தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் நவ. 26-ஆம் தேதி முதல் மறுஅறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை உத்தரவிட்டது.
இதனையடுத்து கடந்த 6 நாள்களாக மீனவா்கள் கடலுக்குச் செல்லவிலை. தற்போது சூறாவளிக் காற்று எச்சரிக்கை இல்லாததால், மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத் துறை அனுமதித்தது.
தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகம், திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனா்.