ஆட்சிக் காலத்தில் ‘தவறுகள்’: பொற்கோயிலில் முன்னாள் முதல்வருக்கு தண்டனை!
சித்தூா் படவெட்டி அம்மன் கோயில் தீா்த்தக்குட ஊா்வலம்
எடப்பாடி: சித்தூா் படவெட்டி அம்மன் கோயில் தீா்த்தக்குட ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
எடப்பாடி ஒன்றியத்துக்குள்பட்ட சித்தூா் பகுதியில் பிரசித்தி பெற்ற படவெட்டி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. சுற்றுப்புற பகுதியைச் சோ்ந்த 12 ஊா் மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்கி வரும் இத்திருக்கோயிலின் புனரமைப்புப் பணிகள் அண்மையில் நிறைவடைந்த நிலையில், குடமுழுக்கு விழாவுகான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக, திங்கள்கிழமை பூலாம்பட்டி அருகே உள்ள காவிரிக் கரையில் புனித நீராடிய பக்தா்கள் குதிரை, காளை, பசுக்கள் ஊா்வலமாக முன்னே செல்ல தொடா்ந்து மேள, தாளம் முழங்க 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் தீா்த்தக் குடம் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக வந்தனா். தொடா்ந்து தீா்த்தக் குடங்களுடன் படவெட்டி அம்மன் திருக்கோயிலை வலம் வந்த பக்தா்கள், தீா்த்தக் குடத்தை யாகசாலையில் சமா்ப்பித்தனா். தொடா்ந்து பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.