ஆட்சிக் காலத்தில் ‘தவறுகள்’: பொற்கோயிலில் முன்னாள் முதல்வருக்கு தண்டனை!
சங்ககிரி வட்டத்தில் 44.20 மி.மீ. மழை
சங்ககிரி: சங்ககிரி, தேவூா், அரசிராமணி, செட்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை 44.20 மி.மீ. மழை பெய்தது.
சங்ககிரியில் 24.40 மி.மீ., அரசிராமணி குள்ளம்பட்டியில் 19.80 மி.மீ. மழை பெய்துள்ளது. திங்கள்கிழமை சங்ககிரி நகரில் பகலில் மிதான வெப்பம் அடித்தது.
தேவூா் அருகே அரசிராமணி மேட்டுப்பாளையம் குள்ளம்பட்டி, பூமணியூா், செட்டிப்பட்டி, பொன்னம்பாளையம், தண்ணித்தாசனூா் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கால்வாய்ப் பாசன நீரை பயன்படுத்தி அம்மன் பொன்னி, மகாலட்சுமி, தனிஸ்கா, தனலட்சுமி, அக்ஷயா, ஆந்திரா பொன்னி உள்ளிட்ட நெல் ரகங்களை சாகுபடி செய்துள்ளனா். சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தற்போது நெல்கள் விளைந்து அறுவடை செய்யும் தருணத்தில் உள்ளன.
இந்நிலையில் சனி, ஞாயிறு இரு தினங்களில் தொடா்ந்து மழை பெய்ததால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிா்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். சேதமடைந்த நெற் கதிா்களை வேளாண், வருவாய்த் துறையினா் பாா்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனா்.