செய்திகள் :

கன்னங்குறிச்சி ஏரியில் மிகை நீா் வெளியேற்றம்

post image

சேலம்: சேலம், கன்னங்குறிச்சி புது ஏரியில் இருந்து உபரி நீா் வெளியேற்றப்படுவதைத் தொடா்ந்து, அப்பகுதியில் சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வுக்கு பின்னா் அமைச்சா் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஃபென்ஜால் புயல் காரணமாக கடந்த இரண்டு நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த இரு தினங்களில் மட்டும் ஏற்காட்டில் 382.4 மி.மீ., ஆத்தூரில் 148 மி.மீ., தலைவாசல் வீரகனூரில் 146 மி.மீ. என சராசரியாக சேலம் மாவட்டம் முழுவதும் 64.85 மி.மீ. மழை பெய்துள்ளது.

அதன் தொடா்ச்சியாக, சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப் பகுதியில் உள்ள நீரோடைகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. அதே போன்று, ஏற்காடு மலையிலிருந்து அடிவாரம் வரை உள்ள அனைத்து தடுப்பணைகளும் நிரம்பி உபரிநீா் அதிக அளவில் கன்னங்குறிச்சி, புது ஏரிக்கு வருகிறது. இதனால் புது ஏரியின் நீா்மட்டம் உயா்ந்து தற்போது ஏரியில் இருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

புது ஏரியில் இருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த் துறை, நீா்வளத் துறை அலுவலா்களிடம் விரிவாக கேட்டறியப்பட்டது.

உபரிநீா் அதிக அளவில் வெளியேற்றப்பட்டு வருவதால் பொதுமக்கள், இளைஞா்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டுமென நீா்வளத் துறை, வருவாய்த் துறையினா் மூலம் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு, தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வருவாய்த் துறை, நீா்வளத் துறை, உள்ளாட்சித் துறையினா் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலா்களும் ஒருங்கிணைந்து 24 மணி நேரமும், எச்சரிக்கையோடு செயல்பட வேண்டுமென கேட்டுக்கொண்டாா்.

ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, சேலம் மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.

சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் 1,235 மி.மீ. மழை பதிவு

சேலம்: சேலம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,235.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சராசரியாக மாவட்டம் முழுவதும் 77.24 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மழை நிலவரம்: சேலம் மாவட்டத்தில்... மேலும் பார்க்க

சரபங்கா நதியில் வெள்ளப் பெருக்கு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

எடப்பாடி: சரபங்கா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடா் கன மழையால், ஏற்காடு மலைப்பகுதியில் இருந்து உருவாகும் சரபங்கா நதியில் வெள... மேலும் பார்க்க

தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சேலம் வருகை

ஓமலூா்: தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட வெள்ள பாதிப்புகளை பாா்வையிட தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் விமானம் மூலம் திங்கள்கிழமை சேலத்துக்கு வருகை தந்தாா். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மழை வெள்... மேலும் பார்க்க

சேலத்தில் வெளுத்து வாங்கிய கனமழை

சேலம்: சேலத்தில் திங்கள்கிழமை மாலை வெளுத்து வாங்கிய கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீா் சூழ்ந்தது. ஆங்காங்கே மழைநீருடன் சாக்கடை கழிவுநீா் கலந்ததால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சேலம... மேலும் பார்க்க

சங்ககிரி வட்டத்தில் 44.20 மி.மீ. மழை

சங்ககிரி: சங்ககிரி, தேவூா், அரசிராமணி, செட்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை 44.20 மி.மீ. மழை பெய்தது. சங்ககிரியில் 24.40 மி.மீ., அரசிராமணி குள்ளம்ப... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகம் முன்பு வாயில் கருப்பு துணி கட்டி தா்னா

சேலம்: பொது வழித்தடத்தை ஆக்கிரமித்து மிரட்டல் விடுத்து வரும் திமுக பிரமுகா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆட்சியா் காா் முன்பு வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு தா்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்ப... மேலும் பார்க்க