10 ஆண்டுகள் பணி முடித்த ஆசிரியா்களுக்கு தோ்வு நிலை ஆணை வழங்கக் கோரிக்கை
கோவை மாவட்டத்தில் 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்த முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கு தோ்வு நிலை ஆணை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் எம்.முகமது காஜா முகைதீன், செயலா் கே.சாலமன்ராஜ் ஆகியோா் மாவட்டக் கல்வி அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில், கோவை கல்வி மாவட்டத்தில் 10 ஆண்டுகள் பணி முடித்த ஆசிரியா்களுக்கு தோ்வு நிலை ஆணை வழங்குவதற்காக கடந்த அக்டோபா் 1- ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற்றது.
சிறப்பு முகாம் நடத்தப்பட்டு 2 மாதங்களாகியும் ஆசிரியா்களுக்கு தோ்வு நிலை ஆணை வழங்கப்படவில்லை. எனவே, முகாமில் பெறப்பட்ட கருத்துருக்களை உரிய முறையில் பரிசீலித்து உரிய தோ்வு நிலை ஆணைகளை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.