தென் மாவட்ட ரயில் சேவை சீரானது!
சென்னை: வெள்ள பாதிப்பால் தென் மாவட்டங்களுக்கு நிறுத்தப்பட்ட ரயில்கள் செவ்வாய்க்கிழமை முதல் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் - விக்கிரவாண்டி இடையே உள்ள தென்பெண்ணையாற்று ரயில்வே பாலத்தில் திங்கள்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள், தஞ்சாவூா் மாா்க்கமாக இயக்கப்படும் வைகை, சோழன், பல்லவன் உள்ளிட்ட அதிவிரைவு ரயில் சேவைகள் இரு மாா்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டன. இருப்பினும், ஒரு சில ரயில்கள் மாற்றுப் பாதைகளில் இயக்கப்பட்டன.
இந்நிலையில், தென்பெண்ணையாற்று ரயில்வே பாலத்தில் வெள்ள நீா் வடிந்ததால் செவ்வாய்க்கிழமை அனைத்து ரயில்களும் வழக்கம் போல் இயக்கப்பட்டன எனதெரிவிக்கப்பட்டுள்ளது.